கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்

இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர். இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்

சனி, 29 டிசம்பர், 2012

கடையநல்லூரில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தவறாக பயன்படுத் திய காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்




கடையநல்லூரில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தவறாக பயன்படுத்தி அப்பாவி ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரியும். பொய்வழக்கு போட்ட SI  சிவன் மீதும் DSP ஜமீம்  மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் கடையநல்லூர் முஸ்லிம்கள் மற்றும்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ...

கடையநல்லூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்ற 70 வயது  ஓய்வு பெற்ற   ஆசிரியரான அந்த முதியவரின் மீது குடி போதையில் வந்த வேல்சாமி என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தால் இடித்ததும் இல்லாமல். முதியவரை தவறாக பேசியதும் அவர் மீதே  வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தார் . இந்த பொய் புகாரை விசாரிக்காமல் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு கொண்ட காவி சிந்தனை   கொண்ட   SI  சிவன் என்பவர்  பொய் வழக்கு பதிவு செய்தார் இவ்வழக்கிற்காக மதுரை நீதிமன்றத்தில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்ற  ஒய்வு பெற்ற ஆசிரியரின் மகன் V.K.முஹைதீன் பிள்ளை அவர்களையும் வன் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல் துறையின் இந்த அராஜக செயலை கண்டித்தும் ஆள்தூக்கி   வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை  ரத்து  செய்யக்கோரியும் . கடையநல்லூர்   முஸ்லிம்கள் மற்றும்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ..இந்த ஆர்ப்பாட்டத்தில்  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில மேலாண்மை குழு உறுப்பினர்  ஹாஜா நூஹ் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் .அவர் தன உரையில் காவல் துறையை எச்சரிக்கும் பொருட்டும்   ஆள்தூக்கி  வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் உரை நிகழ்த்தினார் .இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் ,நடுநிலையாளர்களும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பையும் எச்சரிக்கையும் வெளிப்படுத்தினர்



காற்றழுத்த தாழ்வு : நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பெய்யாமல் ஏமாற்றியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வடகிழக்கு பருவ மழையை நம்பி இருந்தனர். ஆனால் வடகிழக்கு பருவ மழையும் பொய்த்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புயல் சின்னம் உண்டானால் மட்டுமே மழை பெய்யும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பருவ மாற்றங்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்த நிலையில் வங்கக்கடலில் 1 வாரமாக நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையினால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. பரவலாக லேசான தூறலுடன் மழை பெய்தது.

ஏற்கனவே கடும் பனிப்பொழிவால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வந்தது. இந்த வேளையில் தற்போது பெய்து வரும் லேசான மழை மேலும் குளிரை ஏற்படுத்தி உள்ளது. மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது. எனினும் அணைகளில் நீர்மட்டம் உயரும் அளவுக்கு பெரிய மழை இல்லாததால் நீர்மட்டம் பழைய நிலையிலேயே உள்ளது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 58.70 அடியாக உள்ளது. இங்கு வினாடிக்கு 379 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் 605 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சேர்வலாறு அணை 69.09 அடியாக உள்ளது. மணி முத்தாறு அணை நீர்மட்டம் 71.67 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 144 கன அடி தண்ணீர் வருகிறது. 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கடனா அணை நீர்மட்டம் 60.50 அடியாகவும், ராமநதி அணை 54.25 அடியாகவும், கருப்பாநதி அணை 51.84 அடியாகவும் உள்ளது. இதே போல் குண்டாறு அணை 33.45 அடியாகவும், வடக்கு பச்சையாறு 20.50 அடியாகவும், நம்பியாறு 18.24 அடியாகவும் உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 10.75 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் 64 அடியாகவும் உள்ளன.

அணைப்பகுதியில் பாபநாசம் அணையில் 2 மி.மீ. மழையும், சேர்வலாறில் 5 மி.மீ. மழையும், மணிமுத்தாறில் 1.2 மி.மீ. மழையும், ராமநதி, கருப்பாநதி அணையில் தலா 2 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

ஆண் குழந்தை யாருக்கு சொந்தம்?: பெற்றோர்- குழந்தைகளுக்கு டி.என்.ஏ. பரிசோதனை

திருத்தணியை அடுத்த முருகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி கவுதமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான கவுதமி பிரசவத்திற்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் பூந்தமல்லியை அடுத்த வேலப்பன் சாவடியை சேர்ந்த அன்பரசு மனைவி அருணா 3-வது பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
 
இருவருக்கும் ஒரே நாளில் (27-ந்தேதி) அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்தது. முதலில் கவுதமிக்கு ஆண்குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டு அவரது கணவரிடம் குழந்தையை காண்பித்தார்கள். அடுத்ததாக அருணாவுக்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறி அவரது கணவரிடமும் குழந்தையை காட்டி கையெழுத்து பெறப்பட்டது.
 
அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. முனிரத்தினம்- கவுதமிக்கு பெண் குழந்தைதான் பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கவில்லை. இரண்டு பெண்களும் அருகருகே இருந்ததால் குழந்தை மாறிவிட்டது. நாங்கள் செய்த தவறை பெரிதாக்க வேண்டாம் என ஆஸ்பத்திரி ஊழியர்கள் முனிரத்தினத்திடம் முறையிட்டனர்.
 
குழந்தையை திடீரென மாற்ற கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாது அதை ஏற்க மறுத்தார். எனக்கு ஆண் குழந்தைதான் பிறந்தது. அந்த குழந்தைதான் வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். இதனால் குழந்தை மாறிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
 
இதற்கிடையில் தனக்கு பிறந்த ஆண்குழந்தையை என்னிடம் ஒப்படையுங்கள் என அன்பரசு ஒரு புறம் பிரச்சினையை கிளப்ப, இரண்டு பெற்றோர்களும், உறவினர்களும் ஆஸ்பத்திரியில் திரண்டுவிட்டனர். ஆண் குழந்தையை கேட்டு 2 பெற்றோர்களும் முரண்டு பிடிப்பதால் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படுகிறது.
 
பிரச்சினைக்குரிய 2 குழந்தைகள், அவர்களுடைய 2 பெற்றோர்கள் ஆகிய ஆறு பேருக்கும் இந்த சோதனை விரைவில் நடத்தப்படுகிறது. அவர்களுடைய ரத்தங்களை எடுத்து சோதனை செய்வதால் இதன் முடிவு 2 வாரத்தில் தெரியும். டி.என்.ஏ. மருத்துவ முடிவை 2 பெற்றோர்களும் ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால் இந்த உயர்ந்த அதிக செலவிலான மருத்துவ பரிசோதனை முடிவை இரு குடும்பத்தினரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
 
இந்த தவறுக்கு காரணமான ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து இதுவரை மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், இது மிக சாதாரண மனித தவறு என்று மருத்துவமனை ஆர்.எம்.ஏ. தெரிவித்துள்ளார்.

புதன், 26 டிசம்பர், 2012

கடையநல்லூர் விரைவில் தாலுகா அறிவிக்கப்படலாம்


கடையநல்லூர் தாலுகா அமைவதற்கான அனைத்து ஆரம்பக்கட்ட பணிகளும் வருவாய்த்துறை மூலம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தாலுகா எல்கை தொடர்பான வரைபடங்கள் அரசுக்கு அனுப்பபட்டு வருகிறது.நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அமைக்கப்பட வேண்டுமென கடந்த பல வருடங்களாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையில் கடந்த சட்டசபை தேர்தலின் போது முதல்வர் ஜெயலலிதா கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அமைய ஏற்பாடு செய்யப்படு மென தெரிவித்தார்.
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் செந்தூர்பாண்டியன் இதே வாக்குறுதியை அளித்திருந்தார். இதனிடையில் இவைகளை நிறைவேற்றும் வகையில் தற்போது கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அமைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த பட்ஜெட் கூட்டத்தின்போதே இதற்கான அறிவிப்பு வெளிவரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் நெல்லை மாவட்ட கலெக்டர் சமய மூர்த்தி பேசுகையில் : - கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அலுவலகம் அமைக்க அரசு முன்வரவேண்டுமென கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கலெக்டர்கள் மாநாட்டில் தெரிவித்த மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் பேரில் தற்போது அதற்கான நடவடிக்கையை வருவாய்த்துறையினர் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போது கடையநல்லூரை பொறுத்தவரை தென்காசி தாலுகாவில் இடம்பெற்றுள்ளது. கடையநல்லூர் பிர்கா, சேர்ந்தமரம் பிர்கா மற்றும் சிவகிரி தாலுகாவில் உள்ள நகராட்சி ஆகியனவற்றை ஒன்றிணைத்து கடையநல்லூர் தாலுகாவில் இடம் பெறும் வகையில் பஞ்.,கள் பிர்கா வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.தற்போது கடையநல்லூர் தாலுகா அமையும்போது அதற்கான எல்கை எந்த பகுதியில் இருக்க வேண்டுமென்பது தொடர்பான வரைபடங்கள் வருவாய்த்துறை மூலம் அளவிடப்பட்டு வருகிறது. மேலும் கடையநல்லூர் தாலுகாவில் இடம்பெறக்கூடிய பஞ்.,கள், டவுன் பஞ்.,கள், நகராட்சிகள் போன்றவை குறித்த பட்டியல்கள் தொடர்பான கருத்துருக்களும் கோரப்பட்டு வருகின்றன.இதனை தொடர்ந்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கடையநல்லூர் தாலுகா அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பு இருக்குமென்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தாலுகா அலுவலகம் எந்த இடத்தில் அமையக்கூடும் என்பது தொடர்பான சர்வே நம்பர்களையும் வருவாய்த்துறை மூலம் தமிழக அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

செவ்வாய், 25 டிசம்பர், 2012

கடையநல்லூர் பகுதிகளில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது

கடையநல்லூர் நகர பகுதியில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்கு தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் கிட்டுராஜா, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ், இணை செயலாளர் யாத்ரா பழனி, நகர இளைஞரணி செயலாளர் சுப்பையாபாண்டியன், நகர மாணவரணி செயலாளர் செங்கலமுடையார், கவுன்சிலர்கள் முத்துகிருஷ்ணன், முத்துப்பாண்டி, முத்தையாபாண்டி, ஆறுமுகம், மாரிமுத்து மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செய்தனர்.

கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி, இடைகால், திரிகூடபுரம், புன்னையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, ஒன்றிய மாணவரணி செயலாளர் திருப்பதி, யூனியன் துணைதலைவர் பெரியதுரை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் லட்சுமணன், பஞ்.,தலைவர்கள் மூக்கையா, செல்லப்பா, டெய்சிராணி வள்ளிக்குமார், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் பெருமையாபாண்டியன், வெள்ளத்துரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலரஞ்சலி செய்தனர்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

கடையநல்லூர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் நல்லடக்கம்

















கடையநல்லூர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) நல்லடக்கம் . இரங்கல் அறிக்கை 

காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வரும், நாடறிந்த நாவலரும், தலைசிறந்த மார்க்கப் பேரறிஞருமான மவ்லான மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி காதிரி அவர்கள், 20.12.2012 வியாழக்கிழமையன்று அதிகாலை 02.00 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

ஹழ்ரத் பெருந்தகை அவர்கள், தமிழ்நாடு - கேரளம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமது சீரிய சொல்லாற்றலாலும், எழுத்தாற்றலாலும் சன்மார்க்கப் பிரச்சாரப் பணிகளின் மூலம் தீன் சேவையாற்றியும், தன்னுடைய பரந்த - நிறைவான அறிவு ஞானத்தைக் கொண்டு, பன்னூற்றுக் கணக்கான இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்கியும் சேவை செய்துள்ளார்கள். 

அல்லாஹ் அவர்களின் சேவையை ஏற்றுக்கொண்டு, சுவனபதியில் உயர் பதவி நல்குவதுடன், ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நம் உயிரினும் மேலான தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அவர்களையும், நம்மையும் ஒன்று சேர்த்தருள்வானாக, ஆமீன். 

பேரருளாளன் அல்லாஹ், அவர்களுக்கு சுவனத்தில் உயர்வான நற்பதவிகளை நல்க நாம் துஆ செய்வோமாக... அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வானாக. 

ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஹழ்ரத் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைக் கொடுத்தருள் புரிவானாக, ஆமீன்.

புதன், 19 டிசம்பர், 2012

கடையநல்லூர் யூனியன் சத்துணவு பணியாளர்களுக்கு செயல்முறை பயிற்சி

கடையநல்லூர் யூனியனில் சத்துணவு செயல்முறை விளக்க பயிற்சி வகுப்புகள் நடந்தது.தமிழக அரசின் முன்னோடி திட்டத்தில் ஒன்றான சத்துணவு திட்டத்தை மேலும் செம்மைபடுத்தும் விதமாக 13 புதிய வகை உணவுகள் சத்துணவில் சேர்க்க தமிழக அரசு உத்தரவிட்டது. கடையநல்லூர் யூனியனில் உள்ள சத்துணவு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் செயல்முறை விளக்க பயிற்சி வகுப்புகள் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், இடைகால் யூனியன் நடுநிலைப்பள்ளியிலும் நடந்தது.பயிற்சி வகுப்பு நிகழ்ச்சியில் யூனியன் தலைவர் பாணுமதி, துணை தலைவர் பெரியதுரை, பி.டி.ஓக்கள் மோகன், சிக்கந்தர்பீவி, கம்பனேரி பஞ்., தலைவர் மூக்கையா மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

கடையநல்லூர் பகுதியில் அதிகாலை தொடரும் நகை பறிப்பால் பெண்கள் பீதி

கடையநல்லூர் பகுதியில் அதிகாலை தொடரும் நகை பறிப்பால் பெண்கள் பீதி அடைந்துள்ளனர்.
கடையநல்லூர் பகுதி யில் உள்ள கிருஷ்ணாபுரத் தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்து வரு கிறது. இந்த ஆண்டு மட்டும் 5க்கும் மேற்பட்ட சம்பவங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள நகைகள் பறிபோனதாக கூறப்படுகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு பல மணி நேரம் நீடிப்பதால், குறிப்பாக அதிகாலை நேரத்தில் மின்சாரம் இல் லாததை பயன்படுத்தி திருடர்கள் வீடு தெளித்து கோலம் போடும் பெண்கள், பால் வாங்க செல்லும் பெண்களிடம் கைவரிசை காட்டுகின்றனர். 
இதனால் பொதுமக்களிடையே கடும் பீதி நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பால் வாங்க சென்ற கிருஷ்ணாபுரம் திலகர் தெரவை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண்ணிடம் 42 கிராம் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றது பொதுமக்களிடையே கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பல்வேறு நகை திருட்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தும் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. கடையநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் போதுமான அளவு போலீசார் இல்லாத தால் திருட்டு குறித்து துப்பு துலக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர் நகை திருட்டால் அதிகாலையில் பெண்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே  காவல்துறையினர் ஊர்க்காவல் படை மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மற்றும் சமூக நல அமைப்புகளை ஒன்றிணைத்து நகைபறிப்பு சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக் கள் விரும்புகின்றனர்.

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் தென்காசியில் 20ம் தேதி காலை நடக்கிறது. இது குறித்து 108ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட செயல் அலுவலர் ஷியாம் நைஜிஷ் அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஜிவிகே., இ.எம்.ஆர்.ஐ., நிறுவனத்துடன் இணைந்து அவசரகால மருத்துவ சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் மொத்தம் 600க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களுடன் தொடர்ந்து மக்களுக்கு பயனளித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 16 லட்சத்து 24 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர்.ஜிவிகே., இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை தென்காசி ஊராட்சி ஒன்றிய சமுதாய நலக்கூடத்தில் 20ம் தேதி காலை 9.30 மணிக்கு நடத்துகிறது.
டிரைவருக்கான தகுதி: 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களாக பணிபுரிய விரும்புபவர்கள் நேர்முகத் தேர்வு அன்று 25 வயதிற்கு குறையாமலும், 35 வயதிற்கு மிகாமல் இருப்பதோடு, 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்களாக இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் 162.5 செ.மீ உயரத்திற்கு குறையாமல் இருப்பதோடு, இலகுரக டிரைவர் லைசென்ஸ் மற்றும் பேட்ஜ் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன டிரைவிங் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பதற்காக கொண்டு வரவேண்டும். முகாமில் பங்கேற்றபவர்களுக்கு எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவள துறை நேர்காணல், கண் பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வு போன்றவை நடைபெறும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 8 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுக்கான படியாக 100 ரூபாய் வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளர்: மருத்துவ உதவியாளராக பணிபுரிய விரும்புபவர்கள் பி.எஸ்.சி., நர்சிங், உயிரில், தாவரவியல், உயிர் வேதியியல், மைக்ரோ பயாலஜி, பிளான்ட் பயாலஜி மற்றம் இதர வாழ்க்கை அறிவியல் அல்லது ஜி.என்.எம்., அல்லது ஏ.என்.எம்., அல்லது டி.என்.ஏ., அல்லது டி.எம்.எல்.டி., அல்லது டி.பார்ம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 20வயதுக்கு மேலும் 30வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியமாக 8 ஆயிரத்து 100 ரூபாய் வழங்கப்படும்.
இ.எம்.டி., டிரையினி: மேற்கண்ட பணியிடத்திற்கு அரசு மருத்துவக்கல்லூரியில் ஓர் ஆண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 19வயதுக்கு மேலும், 30வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும். மேற்கண்ட பணிகளுக்கு எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம்- உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத்துறையின் நேர்முகம் போன்ற தேர்வுகள் நடத்தப்படும். நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களக்கு 45 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, ஆஸ்பத்திரி மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுக்காக 100 ரூபாய் படியாக வழங்கப்படும். மேலும் விவரம் அறிய விரும்புபவர்கள் 96290-35108 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட செயல் அலுவலர் ஷியாம் நைஜிஷ் அறிக்கையில் கூறியுள்ளார்.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

கடையநல்லூர் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நேற்று தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கடையநல்லூர் சிவகுருநாதன், பண்டாரம், பிச்சாண்டி, மாரியப்பன், வெள்ளத்தாய், முனியாட்சி, காளி ஆகியோர் தலைமையில் பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கோட்டாட்சியர் ராஜகிருபாகரனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கடையநல்லூர் மாவடிக்கால் ரயில்வே பீடர் ரோடு கிருஷ்ணாபுரம் கிராமம் சர்வே எண் 1086,  1087ல் உள்ள புறம்போக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி குடியிருந்து வருகிறோம். வீட்டுவரி செலுத்தி வருகிறோம். மின் இணைப்பு பெற்றுள்ளோம். எங்களுக்கு இந்த வீட்டை தவிர வேறு வீடோ, மனையோ, நிலமோ ஏதும் இல்லை. நாங்கள் நகராட்சி பகுதியில் இருப்பதால் இதவரை எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்கவில்லை. ஏற்கனவே பட்டா சம்பந்தமாக கடந்த நவ.20ம் தேதி மனு அளித்துள்ளோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடையநல்லூர் நகராட்சியில் 20க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி

கடையநல்லூர் நகராட்சியில் ஆணையாளர், மேலாளர் உள்பட 20க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் குடிநீர், சுகா தாரம் உட்பட அனைத்து பணிகளும் ஸ்தம்பித்துள்ளன. 
கடையநல்லூர் நகராட்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர்.  கடந்த 2009ம் ஆண்டு இந்நகராட்சி யில்  டெங்கு காய்ச்சல் பரவி 40க்கும் மேற்பட்டோரும் இந்த ஆண்டு 10க்கும் அதிகமானோரும் பலியாயினர். 
அத்துடன் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு டெங்கு தாக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். உச்ச கட்ட சுகாதார சீர்கேடு மற்றும் குடிநீர் தட்டுபாடு காரணமாகத் தான் இங்கு டெங்கு காய்ச் சல் உள்பட பல்வேறு 
தொற்றுநோய்கள் பரவி வருவதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
இந்நிலையில் இந்நகராட்சியில் ஆணையாளர், மேலாளர், பணியாளர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால் பொதுமக்கள் கொடுக்கும் புகாருக்கு சரி வர பதிலளிக்ககூட அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.  சுமார் 200 துப்புரவு பணியாளர்கள் தேவைப்படும் நிலையில் தற்போது 90 பேர் மட்டுமே இருப்பதால் சுகாதார பணி களும் முற்றிலும் பாதிக்கப் பட்டு  தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. 
இந்நிலையில் கடையநல்லூர் 22வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏராளமான பெண் கள் தங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாவதாக குற்றம் சாட்டி நேற்று நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். ஆனால் ஆணையாளர், மேலாளர் உள்பட பல்வேறு முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளதால் பகல் 12 மணி வரை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட் டது. 
பின்னர் பொதுமக்கள் அங்கிருந்த அலுவலர்களிடம் தண்ணீர் பிரச்சனை குறித்து  முறையிட்டு கலைந்து சென்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையால் கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் முடங்கியுள்ளது.

திங்கள், 3 டிசம்பர், 2012

கடையநல்லூர் அரசு கல்லூரியில் கம்ப்யூட்டர், நூலக வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதி

kadayanallur
செமஸ்டர் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் கல்லூரி படிப்பிற்கான கம்ப்யூட்டர்கள், நூலக வசதியில்லாததால் கடையநல்லூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.கடையநல்லூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் உறுப்பு கல்லூரி நடப்பு கல்வியாண்டு முதல் துவங்கப்பட்டுள்ளது. பிஏ., பிஎஸ்சி, கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கொண்டு இக்கல்லூரி துவங்கப்பட்டது. முதலாம் ஆண்டிலேயே இக்கல்லூரியில் சேர்வதற்கு கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதி மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
கல்லூரி துவங்கப்பட்டு வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 3 மாதங்கள் முடிவடைந்த நிலையில் அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடக்க கூடுமென தெரிகிறது. இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகள் மற்றும் தளவாட பொருட்கள் வாங்குவதற்கு பல்கலைக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
இருந்தபோதிலும் தற்போது கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அது தொடர்பான படிப்பினை தொடர இதுவரை கம்ப்யூட்டர்கள் கல்லூரியில் அமைக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் கல்லூரி படிப்பினை பொறுத்தவரை முக்கியமாக கருதக்கூடிய நூலக வசதியும் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் தேர்வு நெருங்கி வரும் நிலையில் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அமைக்கப்பட வேண்டிய இருக்கை வசதியும் இதுவரை முறையாக மேற்கொள்ளப்படவில்லை. சமீபத்தில் நடந்த தேர்வுகளை எழுதுவதற்கு வாடகைக்கு சேர்கள் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அதிமுக நிர்வாகிகள் இதற்கான பணிகளை செய்தனர்.இருந்தபோதிலும் அடுத்தடுத்து தேர்வுகள் நெருங்கி வருவதால் இருக்கைககள் மற்றும் கம்ப்யூட்டர், நூலக வசதியை தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்கிடவேண்டுமெனபெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

கடையநல்லூர் பகுதியில் கோழிக்கறி விலை வீழ்ச்சி

கேரளாவிற்கு கறிக்கோழிகள் செல்லப்படாததால் ஏராளமான கோழிகள் தேக்கமடைந்ததால் கடையநல்லூர் பகுதியில் நேற்று கிலோ ரூ.40ல் இருந்து 50 ரூபாய் வரை விற்கப்பட்டது. திடீர் விலை வீழ்ச்சியினால் கோழிக்கடை முன்பு அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

தமிழகத்திலிருந்து கறிக்கோழிகள் கேரள மாநிலத்திற்கு அனுப்பபட்டு வருகின்றன. அப்பகுதிகளில் பறவை காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் கோழிகள் கொண்டு செல்லப்படுவது திடீர் திடீரென நிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கறிக்கோழிகள் விலை கடந்த 2 தினங்களாக கடுமையான வீழ்ச்சியை தமிழகத்தில் சந்தித்து வருகிறது.


பண்டிகை காலங்களில் கோழி கறியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.130 முதல் 150 வரை விற்கப்படுவதுண்டு. சாதாரண நாட்களில் 100 ரூபாய் வரை விற்கப்படும். தற்போது கோழிகள் கடுமையான அளவில் தமிழகத்தில் தேக்கமடைந்த நிலையில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படாத நிலையில் கோழி கறியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.


நேற்று முன்தினம் கிலோ ரூ.60க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோழி கறி கிலோ ரூ.40லிருந்து 50 வரை விற்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட விலை வீழ்ச்சியினையடுத்த நேற்று விடுமுறை தினம் என்பதால் அசைவ பிரியர்கள் குறைந்த விலையில் கோழி கறியினை வாங்குவதற்கான கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இனிமேல் சிம் கார்டு பெறுவது எளிதான காரியம் அல்ல


தெருவின் முனைகளில் குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுகளை மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கியது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியாகக் குறைந்து வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, சிம் கார்டு பெறுவது எளிதான காரியம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது.
உச்ச நீதி மன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து, அரசு சிம் கார்டு வழங்கும் முறைக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. நவம்பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, சிம் வேண்டும் ஒருவர், அதற்கான ஆவணங்களின் நகல்களை மட்டும் அளித்தால் பெற முடியாது. யாருடைய பெயரில் சிம் கார்டு வழங்கப்படுகிறதோ, அவர் அதனை வழங்கும் மையத்திற்கு நேரில் சென்று வாங்க வேண்டும். அளிக்கப்படும் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் அவருடையதுதானா என உறுதி செய்யப்படும். 
நுகர்வோர் பணம் செலுத்தியவுடன், ஏற்கனவே இயக்கப்பட்ட சிம் பெறும் பழக்கம் எல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது. 
மேலும், அனைத்து ஆவணங்களை அளித்து, நேரில் சென்று வந்தாலும், துறை ரீதியாக, கொடுக்கப்பட்ட முகவரியில் உறுதி செய்யப்பட்ட பின்னரே, சிம் செயல்படுத்தப்படும். 
தவறான அல்லது போலியான ஆவணங்களைக் கொடுத்து வாங்கிய சந்தாதாரர் மட்டுமின்றி, வழங்கிய விற்பனை மையமும் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர் நோக்க வேண்டியதிருக்கும். புதிதாக சிம் வாங்குவோர் மட்டுமின்றி, ஏற்கனவே சிம் வைத்திருப்போர் குறித்த தகவல்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாத சிம் கார்டுகள் பதிவு நீக்கப்பட்டு வருகின்றன. மேற்காணும் நடவடிக்கைகள் அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனாலேயே, பல நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5% அளவிற்கு சராசரியாகக் குறைந்துள்ளது.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

கடையநல்லூர் மித்ரன் டிரேடர்ஸ்

கடையநல்லூர் மெயின் ரோட்டில் புதிய உதயமாகி இருக்கும் மித்ரன் டிரேடர்ஸ்
எங்களிடம்
வெளிநாடுகளிலிருக்கும் உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து உடனடியாக பணம் பெரும் வசதி (வெஸ்டன் யூனியன் மணி டிரான்ஸ்பர்) கடையநல்லூரிலிருந்து சென்னைக்கு செல்லும் உயர் ரக சொகுசு பேருந்து KPN பஸ் டிக்கட் முன் பதிவு வசதி மற்றும் ஈமெயில், இன்டர்நெட், ஸ்கேனிங், ஆன்லைன் மூலமாக EB பில் கட்டும் வசதி மெமரி கார்டுகள், பென்டிரைவ், CD, DVD,  BLURAY DISC, மேலும் அனைத்து ஆன்லைன் வேலைகளும் செய்து தருகிறோம்.

மித்ரன்  டிரேடர்ஸ்
220c, மெயின் ரோடு,
Dr. சுப்பிரமணியன் கிளினிக் அருகில்
கடையநல்லூர் - 627751


கடையநல்லூர் நண்பர் கலீல் திருமண புகைப்படங்கள்


kadayanallur
நண்பர்  கலீலுர் ரஹ்மான் -னின்  திருமணம் (02.12.2012) ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 11.00 மணிக்கு பேட்டை காதர் மைதீன் பள்ளியில் அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடந்து முடிந்தது மணமக்களின்  நல்வாழ்விற்காக  இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறோம் .
















மேலான அல்லாஹ் உங்கள் இருவரையும் இம்மையிலும், மறுமையிலும் ஒன்றினைப்பானாக!

பெருமானாரின் (ஸல்) நிறைவான சாந்தி நம் அனைவரின் மீதும் நிறைந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!

பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜம அ பைனகுமா Fபீஹைர்.

வியாழன், 29 நவம்பர், 2012

கடையநல்லூர் அருகே சாலை விபத்துக்கள்

கடையநல்லூரில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்கள்

இது சமிபத்தில் கிருஷ்ணாபுரம் அருகே நடந்த சாலை விபத்து படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


கடையநல்லூரில் ஆட்டோ கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்

கடையநல்லூர் பேட்டை ரைஸ்மில் தெருவை சேர்ந்த மாணவர்கள் அனுஷ் (16), மைதீன் (16), ரபீக் (16), செய்யது அகமது (16) இவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர். கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டிக்கு தினமும் மாலை டியூசனுக்கு சென்று வந்தனர்.

அதே போல் நேற்று மாலை பாவா (53) என்பவரின் ஆட்டோவில் டியூசனுக்கு சென்றனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பாவா சடன்பிரேக் போட்டார். இதனால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்து வந்த மாணவர்கள் 4 பேரும் காயம் அடைந்தனர்.

அவர்களில் மைதீன் பாளை அரசு ஆஸ்பத்திரியிலும், ரபீக், செய்யது அகமது ஆகிய இருவரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும், அனுஷ் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கடையநல்லூர் அருகே உள்ள அடவிநயினார் அணையில் ஒரே நாளில் 8 அடி உயர்வு

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள அடவிநயினார் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8அடி உயர்ந்துள்ளது.
 அடவிநயினார் அணையின் மொத்தக் கொள்ளளவு 132 அடி. இதில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 74 அடி அளவில் தண்ணீர் இருந்தது. செவ்வாய்க்கிழமை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புதன்கிழமை காலை நிலவரப்படி 8 அடி உயர்ந்து 82 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
 தற்போது விநாடிக்கு 170 கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாயத்துக்காக விநாடிக்கு 25 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


கடையநல்லூரில் வாடகை பைக்குகளால் விபத்து: எஸ்.பி.யிடம் மனு

கடையநல்லூர் பகுதிகளில் வாடகை பைக்குகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்குமாறு எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடையநல்லூர் வட்டார பழைய இரு சக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கத் தலைவர் சுலைமான், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனு:
 கடையநல்லூர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படும் தொழில் சில ஆண்டுகளாக நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள் வாகனங்களைப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து உள்ளது. இவர்கள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்
கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

புதன், 28 நவம்பர், 2012

நண்பர் கலீல் திருமண அழைப்பிதழ்

நண்பர் கலீல் திருமண அழைப்பிதழ்



நண்பர்  கலீலுர் ரஹ்மான் -னின்  திருமண நல்வாழ்விற்காக  இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறோம் .

மேலான அல்லாஹ் உங்கள் இருவரையும் இம்மையிலும், மறுமையிலும் ஒன்றினைப்பானாக!

பெருமானாரின் (ஸல்) நிறைவான சாந்தி நம் அனைவரின் மீதும் நிறைந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!

பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜம அ பைனகுமா Fபீஹைர்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

கடையநல்லூர் பகுதியில் அதிகரித்து வரும் சுகாதார சீர்கேடு

கடையநல்லூர் பகுதியில்  நகராட்சி நிர்வாகம் மூலம் குப்பைகள் ஆங்காங்கே குவிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது. 
கடையநல்லூர் நகராட்சி நெல்லை மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நிலை நகராட்சியாகும். இங்கு  குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் டெங்கு உள்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் கடந்த 3 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். தற்போதும் இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 
 கடையநல்லூர் நகராட்சியில் போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதாரம் கேள்விகுறியாகி வருகிறது. இதனி தவிர்க்க சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து உரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
இதற்காக கடையநல்லூர் நகராட்சி மூலம் போகநல்லூர் பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் உரக்கிடங்கு உருவாக்கப்பட்டது. 
ஆனால் தற்போது கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அள்ளி போகநல்லூர் கொண்டு செல்லாமல் ஊருக்குள் கொட்டி வைத்துள்ளனர். குப்பைகளுடன் இறைச்சி கழிவுகளும் ஆங்காங்கே கொட்டப்படுவதால் தூற்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வியாழன், 22 நவம்பர், 2012

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய இசை ஆல்பம்!


சைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விரைவில் புதிய இசை ஆல்பம் ஒன்றை ரிலீஸ் செய்யப்போகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். அவருடைய இசையில் வெளியாகும் படங்கள் என்றாலே அந்தப் படத்துக்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகி விடும்.
பெரும்பாலும் தமிழில் வெளியாகும் தனி ஆல்பம் ரசிகர்களிடையே பெரிய அளவில் எடுபடாமல் போய்விடும். ஆனால் 1997 - ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட 'வந்தேமாதரம்' என்ற தனி இசை ஆல்பம் இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக அந்த ஆல்பத்தில் இடம்பெற்ற 'வந்தேமாதரம்' என்ற பாடல் இந்திய நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வெற்றிபெறும் நேரங்களில் இந்தியா முழுக்க பரவலாக இசை ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்டு அந்த ஆல்பம் பெரிய அளவில் ஹிட்டானது.
அந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக ஒரு தனி இசை ஆல்பத்தை ரிலீஸ் செய்யப்போகிறாராம்.
'மா தூஜே சலாம்' (Maa tujhe salaam) என்ற பெயரில் வெளியாக இருக்கும் இந்த ஆல்பம் எனக்கு மிகவும் சவாலான ஆல்பமாகவும் அதே சமயம் ரசிகர்களை கவரும் ஆல்பமாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஹிந்தியில் வெளியாக இருக்கும் இந்த ஆல்பம் தமிழிலும் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.