கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 29 நவம்பர், 2012

கடையநல்லூரில் ஆட்டோ கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்

கடையநல்லூர் பேட்டை ரைஸ்மில் தெருவை சேர்ந்த மாணவர்கள் அனுஷ் (16), மைதீன் (16), ரபீக் (16), செய்யது அகமது (16) இவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர். கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டிக்கு தினமும் மாலை டியூசனுக்கு சென்று வந்தனர்.

அதே போல் நேற்று மாலை பாவா (53) என்பவரின் ஆட்டோவில் டியூசனுக்கு சென்றனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பாவா சடன்பிரேக் போட்டார். இதனால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்து வந்த மாணவர்கள் 4 பேரும் காயம் அடைந்தனர்.

அவர்களில் மைதீன் பாளை அரசு ஆஸ்பத்திரியிலும், ரபீக், செய்யது அகமது ஆகிய இருவரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும், அனுஷ் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக