கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 25 நவம்பர், 2012

கடையநல்லூர் பகுதியில் அதிகரித்து வரும் சுகாதார சீர்கேடு

கடையநல்லூர் பகுதியில்  நகராட்சி நிர்வாகம் மூலம் குப்பைகள் ஆங்காங்கே குவிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது. 
கடையநல்லூர் நகராட்சி நெல்லை மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நிலை நகராட்சியாகும். இங்கு  குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் டெங்கு உள்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் கடந்த 3 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். தற்போதும் இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 
 கடையநல்லூர் நகராட்சியில் போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதாரம் கேள்விகுறியாகி வருகிறது. இதனி தவிர்க்க சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து உரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
இதற்காக கடையநல்லூர் நகராட்சி மூலம் போகநல்லூர் பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் உரக்கிடங்கு உருவாக்கப்பட்டது. 
ஆனால் தற்போது கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அள்ளி போகநல்லூர் கொண்டு செல்லாமல் ஊருக்குள் கொட்டி வைத்துள்ளனர். குப்பைகளுடன் இறைச்சி கழிவுகளும் ஆங்காங்கே கொட்டப்படுவதால் தூற்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக