கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 3 டிசம்பர், 2012

கடையநல்லூர் பகுதியில் கோழிக்கறி விலை வீழ்ச்சி

கேரளாவிற்கு கறிக்கோழிகள் செல்லப்படாததால் ஏராளமான கோழிகள் தேக்கமடைந்ததால் கடையநல்லூர் பகுதியில் நேற்று கிலோ ரூ.40ல் இருந்து 50 ரூபாய் வரை விற்கப்பட்டது. திடீர் விலை வீழ்ச்சியினால் கோழிக்கடை முன்பு அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

தமிழகத்திலிருந்து கறிக்கோழிகள் கேரள மாநிலத்திற்கு அனுப்பபட்டு வருகின்றன. அப்பகுதிகளில் பறவை காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் கோழிகள் கொண்டு செல்லப்படுவது திடீர் திடீரென நிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கறிக்கோழிகள் விலை கடந்த 2 தினங்களாக கடுமையான வீழ்ச்சியை தமிழகத்தில் சந்தித்து வருகிறது.


பண்டிகை காலங்களில் கோழி கறியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.130 முதல் 150 வரை விற்கப்படுவதுண்டு. சாதாரண நாட்களில் 100 ரூபாய் வரை விற்கப்படும். தற்போது கோழிகள் கடுமையான அளவில் தமிழகத்தில் தேக்கமடைந்த நிலையில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படாத நிலையில் கோழி கறியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.


நேற்று முன்தினம் கிலோ ரூ.60க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோழி கறி கிலோ ரூ.40லிருந்து 50 வரை விற்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட விலை வீழ்ச்சியினையடுத்த நேற்று விடுமுறை தினம் என்பதால் அசைவ பிரியர்கள் குறைந்த விலையில் கோழி கறியினை வாங்குவதற்கான கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக