கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 4 டிசம்பர், 2012

கடையநல்லூர் நகராட்சியில் 20க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி

கடையநல்லூர் நகராட்சியில் ஆணையாளர், மேலாளர் உள்பட 20க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் குடிநீர், சுகா தாரம் உட்பட அனைத்து பணிகளும் ஸ்தம்பித்துள்ளன. 
கடையநல்லூர் நகராட்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர்.  கடந்த 2009ம் ஆண்டு இந்நகராட்சி யில்  டெங்கு காய்ச்சல் பரவி 40க்கும் மேற்பட்டோரும் இந்த ஆண்டு 10க்கும் அதிகமானோரும் பலியாயினர். 
அத்துடன் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு டெங்கு தாக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். உச்ச கட்ட சுகாதார சீர்கேடு மற்றும் குடிநீர் தட்டுபாடு காரணமாகத் தான் இங்கு டெங்கு காய்ச் சல் உள்பட பல்வேறு 
தொற்றுநோய்கள் பரவி வருவதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
இந்நிலையில் இந்நகராட்சியில் ஆணையாளர், மேலாளர், பணியாளர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால் பொதுமக்கள் கொடுக்கும் புகாருக்கு சரி வர பதிலளிக்ககூட அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.  சுமார் 200 துப்புரவு பணியாளர்கள் தேவைப்படும் நிலையில் தற்போது 90 பேர் மட்டுமே இருப்பதால் சுகாதார பணி களும் முற்றிலும் பாதிக்கப் பட்டு  தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. 
இந்நிலையில் கடையநல்லூர் 22வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏராளமான பெண் கள் தங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாவதாக குற்றம் சாட்டி நேற்று நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். ஆனால் ஆணையாளர், மேலாளர் உள்பட பல்வேறு முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளதால் பகல் 12 மணி வரை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட் டது. 
பின்னர் பொதுமக்கள் அங்கிருந்த அலுவலர்களிடம் தண்ணீர் பிரச்சனை குறித்து  முறையிட்டு கலைந்து சென்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையால் கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் முடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக