கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 18 டிசம்பர், 2012

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் தென்காசியில் 20ம் தேதி காலை நடக்கிறது. இது குறித்து 108ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட செயல் அலுவலர் ஷியாம் நைஜிஷ் அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஜிவிகே., இ.எம்.ஆர்.ஐ., நிறுவனத்துடன் இணைந்து அவசரகால மருத்துவ சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் மொத்தம் 600க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களுடன் தொடர்ந்து மக்களுக்கு பயனளித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 16 லட்சத்து 24 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர்.ஜிவிகே., இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை தென்காசி ஊராட்சி ஒன்றிய சமுதாய நலக்கூடத்தில் 20ம் தேதி காலை 9.30 மணிக்கு நடத்துகிறது.
டிரைவருக்கான தகுதி: 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களாக பணிபுரிய விரும்புபவர்கள் நேர்முகத் தேர்வு அன்று 25 வயதிற்கு குறையாமலும், 35 வயதிற்கு மிகாமல் இருப்பதோடு, 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்களாக இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் 162.5 செ.மீ உயரத்திற்கு குறையாமல் இருப்பதோடு, இலகுரக டிரைவர் லைசென்ஸ் மற்றும் பேட்ஜ் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன டிரைவிங் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பதற்காக கொண்டு வரவேண்டும். முகாமில் பங்கேற்றபவர்களுக்கு எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவள துறை நேர்காணல், கண் பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வு போன்றவை நடைபெறும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 8 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுக்கான படியாக 100 ரூபாய் வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளர்: மருத்துவ உதவியாளராக பணிபுரிய விரும்புபவர்கள் பி.எஸ்.சி., நர்சிங், உயிரில், தாவரவியல், உயிர் வேதியியல், மைக்ரோ பயாலஜி, பிளான்ட் பயாலஜி மற்றம் இதர வாழ்க்கை அறிவியல் அல்லது ஜி.என்.எம்., அல்லது ஏ.என்.எம்., அல்லது டி.என்.ஏ., அல்லது டி.எம்.எல்.டி., அல்லது டி.பார்ம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 20வயதுக்கு மேலும் 30வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியமாக 8 ஆயிரத்து 100 ரூபாய் வழங்கப்படும்.
இ.எம்.டி., டிரையினி: மேற்கண்ட பணியிடத்திற்கு அரசு மருத்துவக்கல்லூரியில் ஓர் ஆண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 19வயதுக்கு மேலும், 30வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும். மேற்கண்ட பணிகளுக்கு எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம்- உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத்துறையின் நேர்முகம் போன்ற தேர்வுகள் நடத்தப்படும். நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களக்கு 45 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, ஆஸ்பத்திரி மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுக்காக 100 ரூபாய் படியாக வழங்கப்படும். மேலும் விவரம் அறிய விரும்புபவர்கள் 96290-35108 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட செயல் அலுவலர் ஷியாம் நைஜிஷ் அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக