கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 18 டிசம்பர், 2012

கடையநல்லூர் பகுதியில் அதிகாலை தொடரும் நகை பறிப்பால் பெண்கள் பீதி

கடையநல்லூர் பகுதியில் அதிகாலை தொடரும் நகை பறிப்பால் பெண்கள் பீதி அடைந்துள்ளனர்.
கடையநல்லூர் பகுதி யில் உள்ள கிருஷ்ணாபுரத் தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்து வரு கிறது. இந்த ஆண்டு மட்டும் 5க்கும் மேற்பட்ட சம்பவங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள நகைகள் பறிபோனதாக கூறப்படுகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு பல மணி நேரம் நீடிப்பதால், குறிப்பாக அதிகாலை நேரத்தில் மின்சாரம் இல் லாததை பயன்படுத்தி திருடர்கள் வீடு தெளித்து கோலம் போடும் பெண்கள், பால் வாங்க செல்லும் பெண்களிடம் கைவரிசை காட்டுகின்றனர். 
இதனால் பொதுமக்களிடையே கடும் பீதி நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பால் வாங்க சென்ற கிருஷ்ணாபுரம் திலகர் தெரவை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண்ணிடம் 42 கிராம் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றது பொதுமக்களிடையே கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பல்வேறு நகை திருட்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தும் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. கடையநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் போதுமான அளவு போலீசார் இல்லாத தால் திருட்டு குறித்து துப்பு துலக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர் நகை திருட்டால் அதிகாலையில் பெண்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே  காவல்துறையினர் ஊர்க்காவல் படை மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மற்றும் சமூக நல அமைப்புகளை ஒன்றிணைத்து நகைபறிப்பு சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக் கள் விரும்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக