நல்லூர் மக்களுக்காக தற்பொழுது kdnl.net - என்ற இணையதளம் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது எங்களுடைய சேவையை அவர்களுடன் இணைத்துக்கொண்டோம். இனி நீங்களும் kdnl.net-டுடன் இணைந்து கொள்ளுங்கள்
கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள
ஞாயிறு, 5 அக்டோபர், 2014
செவ்வாய், 22 ஜனவரி, 2013
கடையநல்லூரில் நாளை (23ம் தேதி) பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
கடையநல்லூரில் நாளை (23ம் தேதி) பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து தென்காசி தாசில்தார் தேவபிரான் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கடையநல்லூரில் நாளை (23ம் தேதி) பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடக்கிறது. கடையநல்லூர் நகராட்சி கூட்ட அரங்கில் நடக்கும் முகாமில் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, கம்பனேரி பகுதி1,2, போகநல்லூர், காசிதர்மம், வைரவன்குளம், கனகசபாபதிபேரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பட்டா மாறுதல் வழங்கப்படுகிறது. தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன் தலைமையில் நடைபெறும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடக்கிறது.
பட்டா மாறுதல் பெற விரும்புவோர் வில்லங்க சான்று, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு 29 ம் தேதி நேர்முகத் தேர்வு துவக்கம்
சவூதி அரேபிய சுகாதார துறை அமைச்சகத்தின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிய விரும்பும் டாக்டர்கள், சிறப்பு டாக்டர்களுக்கான நேர்முகத் தேர்வு டில்லி, பெங்களூரு மற்றும் கொச்சியில் 29ம் தேதி முதல் பிப். 8 ம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து பன்னாட்டு வேலைவாய்ப்பு கழக நிர்வாக இயக்குநர் பிரகாஷ் கூறியதாவது; சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற 2 ஆண்டு பணி அனுபவம் மற்றும் அனைத்து துறைகளிலும் 55 வயதிற்குட்பட்ட கன்சல்டண்ட்கள், சிறப்பு டாக்டர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். மேலும் மயக்க மருத்துவப் பிரிவின் தீவிர கண்காணிப்பு பிரிவில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்ற 45 வயதிற்குட்பட்ட ரெசிடெண்ட் டாக்டர்கள் தேவைப்படுகின்றனர்.
மேற்கண்ட பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு சவூதி அரேபிய தேர்வுக் குழுவினரால் டில்லி, பெங்களூரு, கொச்சின் போன்ற இடங்களில் 29ம் தேதி முதல் பிப்.8 ம் தேதி வரை நடக்கிறது.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணி அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கட், இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.
எனவே விருப்பமுள்ள டாக்டர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை வலயசமறலை ருஆ கலரடந.யவல என்ற இ.மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்கள் அறிய 24464267, 24464268 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு நிர்வாக இயக்குநர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும், மின்சார தட்டுப்பாட்டுக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க. கட்சிகள்தான் காரணம் சீமான் பேச்சு
சங்கரன்கோவிலில் மொழிஞாயிறு தேவநேய பாவாணர் நினைவை போற்றி தமிழர் எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது. தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
தமிழர்கள் அனைவரும் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும். ஆனால் மற்ற பண்டிகைகளைத்தான் நாம் மும்முரமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுகிறது. எனவே வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும்.
தமிழ் ஈழப் பிரச்சினையில் தி.மு.க. தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது. பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமை மூட வேண்டும் என்று பலமுறை கோரியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் மதுக்கடைகள்தான். எனவே குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாட்டுக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க. கட்சிகள்தான் காரணம்.
இவ்வாறு சீமான் பேசினார்.
வெள்ளி, 11 ஜனவரி, 2013
கடையநல்லூர் காயிதே மில்லத் திடல் அருகே தீ விபத்து
கடையநல்லூர் காயிதே மில்லத் திடல் வளாகத்தில் வசிப்பவர் ஹாஜா மைதீன் இவர் யானை கூண்டு அருகே கடந்த சில வருடங்களாக பெட்டி கடை நடத்தி வருகிறார் .நேற்று கடையை அடைத்து விட்டு இவர் வெளியூர் சென்றுள்ளார் . இந்நிலையில் நேற்று இரவு கடையில் திடிரென தீப்பிடித்துள்ளது . பிரிட்ஜ் , டி.வி , ஃ பேன் போன்றவை தீயில் கருகியுள்ளன. இதன் மதிப்பு பல ஆயிரங்கள் இருக்கும் என கூறப்படுகிறது .இத்தீ விபத்திற்கு மின்சார கசிவு காரணமா என்று விசாரணை நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
வியாழன், 10 ஜனவரி, 2013
கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் பெண்கடத்தல்: ஒருவர் கைது
கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் பெண்ணை கடத்தியது தொடர்பாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணாபுரம்,கோழிக்குஞ்சு வலசைத் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி. இவரது மகள் லிங்கம்மாள் (17). இவர், சங்கரன்கோவிலிலுள்ள தனியார் தொழில்சாலையில் வேலை செய்து வருகிறார். இம்மாதம் 6-ம் தேதி வேலைக்குச் சென்ற லிங்கம்மாள் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து கடையநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து லிங்கம்மாளை கடத்திச் சென்றதாக கிருஷ்ணாபுரம், ராமரை (29) கைது செய்தனர்.
சவூதியில் இலங்கைப் பெண்ணின் 'தலை துண்டி' மரண தண்டனை
சவூதி அரேபியாவில் 4 மாத குழந்தையின் மரணத்துக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்ற பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஸானா சவூதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் மீது 2005-ம் ஆண்டு 4 மாத குழந்தையின் மரணத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் இலங்கை அரசு சார்பில் ரிஸானாவின் வயது 17தான் என்பதால் கருணை காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. சவூதி அரசர் அப்துல்லாவுக்கும் ரிஸானாவின் பெற்றோர் கருணைமனு அனுப்பியிருந்தனர். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ரிஸானாவுக்கு கருணை காட்ட வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று ரிஸானாவின் தலையை துண்டித்து சவூதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
வெள்ளி, 4 ஜனவரி, 2013
கடையநல்லூர் வருவாய் பிர்காவில் 66 ஆயிரம் இலவச வேட்டி சேலைகள் வினியோகம்
கடையநல்லூர் வருவாய் பிர்காவில் 66 ஆயிரம் இலவச வேட்டி சேலைகள் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தென்காசி கோட்டத்தில் இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் கடையநல்லூர் பிர்காவிலும் இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், காசிதர்மம், சொக்கம்பட்டி, கம்பனேரி புதுக்குடி பகுதி-1, பகுதி-2, போகநல்லூர் ஆகிய கிராம வருவாய் பகுதிகளில் அமைந்துள்ள பயனாளிகளுக்கு இலவச வேட்டி ,சேலைகள் வழங்கப்படுகிறது.
கடையநல்லூர் வருவாய் பிர்காவில் தலா 33 ஆயிரம் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை தென்காசி ஆர்டிஓ., ராஜகிருபாகரன், தாசில்தார் தேவபிரான் ஆலோசனையின்படி வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் விஏஓ.,க்கள்,கிராம உதவியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 3 ஜனவரி, 2013
ஞாயிறு, 30 டிசம்பர், 2012
இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்
இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர். இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்
சனி, 29 டிசம்பர், 2012
கடையநல்லூரில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தவறாக பயன்படுத் திய காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தவறாக பயன்படுத்தி அப்பாவி ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரியும். பொய்வழக்கு போட்ட SI சிவன் மீதும் DSP ஜமீம் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் கடையநல்லூர் முஸ்லிம்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ...
கடையநல்லூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்ற 70 வயது ஓய்வு பெற்ற ஆசிரியரான அந்த முதியவரின் மீது குடி போதையில் வந்த வேல்சாமி என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தால் இடித்ததும் இல்லாமல். முதியவரை தவறாக பேசியதும் அவர் மீதே வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தார் . இந்த பொய் புகாரை விசாரிக்காமல் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு கொண்ட காவி சிந்தனை கொண்ட SI சிவன் என்பவர் பொய் வழக்கு பதிவு செய்தார் இவ்வழக்கிற்காக மதுரை நீதிமன்றத்தில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்ற ஒய்வு பெற்ற ஆசிரியரின் மகன் V.K.முஹைதீன் பிள்ளை அவர்களையும் வன் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல் துறையின் இந்த அராஜக செயலை கண்டித்தும் ஆள்தூக்கி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் . கடையநல்லூர் முஸ்லிம்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ..இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் ஹாஜா நூஹ் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் .அவர் தன உரையில் காவல் துறையை எச்சரிக்கும் பொருட்டும் ஆள்தூக்கி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் உரை நிகழ்த்தினார் .இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் ,நடுநிலையாளர்களும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பையும் எச்சரிக்கையும் வெளிப்படுத்தினர்
காற்றழுத்த தாழ்வு : நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பெய்யாமல் ஏமாற்றியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வடகிழக்கு பருவ மழையை நம்பி இருந்தனர். ஆனால் வடகிழக்கு பருவ மழையும் பொய்த்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புயல் சின்னம் உண்டானால் மட்டுமே மழை பெய்யும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பருவ மாற்றங்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் 1 வாரமாக நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையினால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. பரவலாக லேசான தூறலுடன் மழை பெய்தது.
ஏற்கனவே கடும் பனிப்பொழிவால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வந்தது. இந்த வேளையில் தற்போது பெய்து வரும் லேசான மழை மேலும் குளிரை ஏற்படுத்தி உள்ளது. மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது. எனினும் அணைகளில் நீர்மட்டம் உயரும் அளவுக்கு பெரிய மழை இல்லாததால் நீர்மட்டம் பழைய நிலையிலேயே உள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 58.70 அடியாக உள்ளது. இங்கு வினாடிக்கு 379 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் 605 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சேர்வலாறு அணை 69.09 அடியாக உள்ளது. மணி முத்தாறு அணை நீர்மட்டம் 71.67 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 144 கன அடி தண்ணீர் வருகிறது. 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடனா அணை நீர்மட்டம் 60.50 அடியாகவும், ராமநதி அணை 54.25 அடியாகவும், கருப்பாநதி அணை 51.84 அடியாகவும் உள்ளது. இதே போல் குண்டாறு அணை 33.45 அடியாகவும், வடக்கு பச்சையாறு 20.50 அடியாகவும், நம்பியாறு 18.24 அடியாகவும் உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 10.75 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் 64 அடியாகவும் உள்ளன.
அணைப்பகுதியில் பாபநாசம் அணையில் 2 மி.மீ. மழையும், சேர்வலாறில் 5 மி.மீ. மழையும், மணிமுத்தாறில் 1.2 மி.மீ. மழையும், ராமநதி, கருப்பாநதி அணையில் தலா 2 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

ஆண் குழந்தை யாருக்கு சொந்தம்?: பெற்றோர்- குழந்தைகளுக்கு டி.என்.ஏ. பரிசோதனை
திருத்தணியை அடுத்த முருகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி கவுதமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான கவுதமி பிரசவத்திற்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் பூந்தமல்லியை அடுத்த வேலப்பன் சாவடியை சேர்ந்த அன்பரசு மனைவி அருணா 3-வது பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
இருவருக்கும் ஒரே நாளில் (27-ந்தேதி) அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்தது. முதலில் கவுதமிக்கு ஆண்குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டு அவரது கணவரிடம் குழந்தையை காண்பித்தார்கள். அடுத்ததாக அருணாவுக்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறி அவரது கணவரிடமும் குழந்தையை காட்டி கையெழுத்து பெறப்பட்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. முனிரத்தினம்- கவுதமிக்கு பெண் குழந்தைதான் பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கவில்லை. இரண்டு பெண்களும் அருகருகே இருந்ததால் குழந்தை மாறிவிட்டது. நாங்கள் செய்த தவறை பெரிதாக்க வேண்டாம் என ஆஸ்பத்திரி ஊழியர்கள் முனிரத்தினத்திடம் முறையிட்டனர்.
குழந்தையை திடீரென மாற்ற கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாது அதை ஏற்க மறுத்தார். எனக்கு ஆண் குழந்தைதான் பிறந்தது. அந்த குழந்தைதான் வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். இதனால் குழந்தை மாறிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதற்கிடையில் தனக்கு பிறந்த ஆண்குழந்தையை என்னிடம் ஒப்படையுங்கள் என அன்பரசு ஒரு புறம் பிரச்சினையை கிளப்ப, இரண்டு பெற்றோர்களும், உறவினர்களும் ஆஸ்பத்திரியில் திரண்டுவிட்டனர். ஆண் குழந்தையை கேட்டு 2 பெற்றோர்களும் முரண்டு பிடிப்பதால் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படுகிறது.
பிரச்சினைக்குரிய 2 குழந்தைகள், அவர்களுடைய 2 பெற்றோர்கள் ஆகிய ஆறு பேருக்கும் இந்த சோதனை விரைவில் நடத்தப்படுகிறது. அவர்களுடைய ரத்தங்களை எடுத்து சோதனை செய்வதால் இதன் முடிவு 2 வாரத்தில் தெரியும். டி.என்.ஏ. மருத்துவ முடிவை 2 பெற்றோர்களும் ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால் இந்த உயர்ந்த அதிக செலவிலான மருத்துவ பரிசோதனை முடிவை இரு குடும்பத்தினரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
இந்த தவறுக்கு காரணமான ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து இதுவரை மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், இது மிக சாதாரண மனித தவறு என்று மருத்துவமனை ஆர்.எம்.ஏ. தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 28 டிசம்பர், 2012
புதன், 26 டிசம்பர், 2012
கடையநல்லூர் விரைவில் தாலுகா அறிவிக்கப்படலாம்
கடையநல்லூர் தாலுகா அமைவதற்கான அனைத்து ஆரம்பக்கட்ட பணிகளும் வருவாய்த்துறை மூலம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தாலுகா எல்கை தொடர்பான வரைபடங்கள் அரசுக்கு அனுப்பபட்டு வருகிறது.நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அமைக்கப்பட வேண்டுமென கடந்த பல வருடங்களாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையில் கடந்த சட்டசபை தேர்தலின் போது முதல்வர் ஜெயலலிதா கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அமைய ஏற்பாடு செய்யப்படு மென தெரிவித்தார்.
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் செந்தூர்பாண்டியன் இதே வாக்குறுதியை அளித்திருந்தார். இதனிடையில் இவைகளை நிறைவேற்றும் வகையில் தற்போது கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அமைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த பட்ஜெட் கூட்டத்தின்போதே இதற்கான அறிவிப்பு வெளிவரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் நெல்லை மாவட்ட கலெக்டர் சமய மூர்த்தி பேசுகையில் : - கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அலுவலகம் அமைக்க அரசு முன்வரவேண்டுமென கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கலெக்டர்கள் மாநாட்டில் தெரிவித்த மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் பேரில் தற்போது அதற்கான நடவடிக்கையை வருவாய்த்துறையினர் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போது கடையநல்லூரை பொறுத்தவரை தென்காசி தாலுகாவில் இடம்பெற்றுள்ளது. கடையநல்லூர் பிர்கா, சேர்ந்தமரம் பிர்கா மற்றும் சிவகிரி தாலுகாவில் உள்ள நகராட்சி ஆகியனவற்றை ஒன்றிணைத்து கடையநல்லூர் தாலுகாவில் இடம் பெறும் வகையில் பஞ்.,கள் பிர்கா வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.தற்போது கடையநல்லூர் தாலுகா அமையும்போது அதற்கான எல்கை எந்த பகுதியில் இருக்க வேண்டுமென்பது தொடர்பான வரைபடங்கள் வருவாய்த்துறை மூலம் அளவிடப்பட்டு வருகிறது. மேலும் கடையநல்லூர் தாலுகாவில் இடம்பெறக்கூடிய பஞ்.,கள், டவுன் பஞ்.,கள், நகராட்சிகள் போன்றவை குறித்த பட்டியல்கள் தொடர்பான கருத்துருக்களும் கோரப்பட்டு வருகின்றன.இதனை தொடர்ந்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கடையநல்லூர் தாலுகா அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பு இருக்குமென்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தாலுகா அலுவலகம் எந்த இடத்தில் அமையக்கூடும் என்பது தொடர்பான சர்வே நம்பர்களையும் வருவாய்த்துறை மூலம் தமிழக அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
செவ்வாய், 25 டிசம்பர், 2012
கடையநல்லூர் பகுதிகளில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது
கடையநல்லூர் நகர பகுதியில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்கு தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் கிட்டுராஜா, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ், இணை செயலாளர் யாத்ரா பழனி, நகர இளைஞரணி செயலாளர் சுப்பையாபாண்டியன், நகர மாணவரணி செயலாளர் செங்கலமுடையார், கவுன்சிலர்கள் முத்துகிருஷ்ணன், முத்துப்பாண்டி, முத்தையாபாண்டி, ஆறுமுகம், மாரிமுத்து மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செய்தனர்.
கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி, இடைகால், திரிகூடபுரம், புன்னையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, ஒன்றிய மாணவரணி செயலாளர் திருப்பதி, யூனியன் துணைதலைவர் பெரியதுரை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் லட்சுமணன், பஞ்.,தலைவர்கள் மூக்கையா, செல்லப்பா, டெய்சிராணி வள்ளிக்குமார், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் பெருமையாபாண்டியன், வெள்ளத்துரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலரஞ்சலி செய்தனர்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012
கடையநல்லூர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் நல்லடக்கம்
கடையநல்லூர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) நல்லடக்கம் . இரங்கல் அறிக்கை
காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வரும், நாடறிந்த நாவலரும், தலைசிறந்த மார்க்கப் பேரறிஞருமான மவ்லான மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி காதிரி அவர்கள், 20.12.2012 வியாழக்கிழமையன்று அதிகாலை 02.00 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஹழ்ரத் பெருந்தகை அவர்கள், தமிழ்நாடு - கேரளம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமது சீரிய சொல்லாற்றலாலும், எழுத்தாற்றலாலும் சன்மார்க்கப் பிரச்சாரப் பணிகளின் மூலம் தீன் சேவையாற்றியும், தன்னுடைய பரந்த - நிறைவான அறிவு ஞானத்தைக் கொண்டு, பன்னூற்றுக் கணக்கான இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்கியும் சேவை செய்துள்ளார்கள்.
அல்லாஹ் அவர்களின் சேவையை ஏற்றுக்கொண்டு, சுவனபதியில் உயர் பதவி நல்குவதுடன், ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நம் உயிரினும் மேலான தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அவர்களையும், நம்மையும் ஒன்று சேர்த்தருள்வானாக, ஆமீன்.
பேரருளாளன் அல்லாஹ், அவர்களுக்கு சுவனத்தில் உயர்வான நற்பதவிகளை நல்க நாம் துஆ செய்வோமாக... அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வானாக.
ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஹழ்ரத் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைக் கொடுத்தருள் புரிவானாக, ஆமீன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)