கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 22 ஜனவரி, 2013

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும், மின்சார தட்டுப்பாட்டுக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க. கட்சிகள்தான் காரணம் சீமான் பேச்சு



சங்கரன்கோவிலில் மொழிஞாயிறு தேவநேய பாவாணர் நினைவை போற்றி தமிழர் எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது. தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
தமிழர்கள் அனைவரும் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும். ஆனால் மற்ற பண்டிகைகளைத்தான் நாம் மும்முரமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுகிறது. எனவே வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும்.
தமிழ் ஈழப் பிரச்சினையில் தி.மு.க. தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது. பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமை மூட வேண்டும் என்று பலமுறை கோரியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் மதுக்கடைகள்தான். எனவே குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாட்டுக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க. கட்சிகள்தான் காரணம்.
இவ்வாறு சீமான் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக