பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி
SDPI கட்சி நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம்
டாஸ்மாக்கை இழுத்து மூடு! மது விலக்கை அமல்ப்படுத்து! என்ற தலைப்பில் அக்டோபர்- 2 லிருந்து அக்டோபர்- 17 வரை தமிழகம் முழுவதும் பல்வேறு போரட்டகளை நடத்த வேண்டும் என SDPI கட்சியின் மாநில தலைமை தீர்மானித்தது.
முதற்கட்ட போராட்டமாக அக்டோபர் -2 மகாத்மா காந்திஜியின் பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மனித சங்கிலி போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்டத்தில் சங்கரன்கோவில், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய மூன்று பகுதிகளில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கடையநல்லூரில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு நெல்லை மேற்கு மாவட்ட பொருளாளர் s.நைனா முஹம்மது கனி தலைமையேற்றார். பாப்புலர் ஃப்ரண்டின் நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் K.A.லுக்மான் ஹக்கீம் B.A;B.L, SDPIயின் கடையநல்லூர் நகர தலைவர் I.M.பாதுஷா,செயலாளர் A.ஹக்கீம் ,N.அசன் மைதீன் , பாப்புலர் ஃப்ரண்டின் கடையநல்லூர் நகர தலைவர் S.முஹம்மது கனி,தென்காசி நகர தலைவர் மசூது அலி, செயலாளர் செய்யது அலி, இளசிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட துணை செயலாளர் M.K.இசக்கிப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் U.T.அஜித் ரஹ்மான், S.A. ஷவ்க்கதலி இமாம் மற்றும் ஓய்வு பெற்ற IAS அதிகாரியும் காந்தியவாதிமாகிய தியாகி லட்சுமிகாந்தன் பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர். நன்றயுரையை கடையநல்லூர் கிழக்கு பகுதி தலைவர் N.T.முஹம்மது ஹுசைன் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக