கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 5 செப்டம்பர், 2012

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 54 பேர் உயிரிழப்பு

சிவகாசியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் இருக்கிறது முதலிப்பட்டி. இங்கு இருக்கும் ஓம் சக்தி பட்டாசு ஆலையில் இன்று காலையில் திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 45 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை, சிவகாசி, விருதுநகர் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது.

குற்றாலம் மெயின் அருவில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு

குற்றாலம் மெயின் அருவில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுமார் 7 மணி நேரம் குளிக்க தடை விதிக்கப்பட்டது.குற்றாலம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் அவ்வப்போது தண்ணீர் அதிகரித்தவண்ணம் உள்ளது. சீசன் களை கட்டியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அலைமோதுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை பெய்து வருவதால், நேற்று குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக மெயின் அருவியில் சுமார் 7 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுந்தது. மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்த மகிழ்ந்தனர்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

கடையநல்லூர் அ.தி.மு.க சார்பில் பொது கூட்டம் நடிகர் தியாகு பேச்சு

கடையநல்லூர் அ.தி.மு.க சார்பில் கழக அரசின் சார்பில் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை விளக்கப் பொது கூட்டம் 


கடையநல்லூர் உங்களை போன்றவர்களால் பெருமையடைகிறது

கடையநல்லூர் உங்களை போன்றவர்களால்  பெருமையடைகிறது
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த திரு , T . M . முஹம்மது மைதீன் அவர்கள் , கடையநல்லூர் நகராட்சியில் , அடுத்து தென்காசி , சிவகாசி , ஆவடி என்று ஒவ்வொரு நகராட்சியிலும் ஒவ்வொரு பதவி வகித்து அனைத்து ஊழியர்களிடமும் , உயர் அதிகாரிகளிடமும் நற்பெயர் எடுத்தவர் , எங்களின் மரியாதைக்குரிய நண்பரும் கூட ; மென்மையான மனம் படைத்தவர் , யாரையும் மதிக்கத் தெரிந்தவர் ; அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர் , இப்போது கீழக்கரை நகராட்சியில் பதவி உயர்வு பெற்று நகராட்சியின் கமிஷனராக பொறுப்பெடுத்து , குறுகிய நாட்களிலேயே நல்ல பெயர் எடுத்து விட்டார் . அவரின் பதவி உயர்வால் கடையநல்லூர் பெருமையடைகிறது . அனைவரும் வாழ்த்துவோம் !
அனைத்து புகழும் இறைவனுக்கே !!!

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

கடையநல்லூர் காயிதே மில்லத் ஈத்கா திடலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை புகைப்படங்கள் இணைப்பு

கடையநல்லூர்  காயிதே மில்லத் ஈத்கா திடலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை TNTJ தலைமையில் நடத்தப்பட்டது 

இன்று காலை சுமார் 7.30 மணியளவில் காயிதே மில்லத் ஈத்கா திடலில் மழை வேண்டி சிறப்பு தொழுகையை TNTJ கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பில் சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் திரளாத TNTJ உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.





கடையநல்லூரில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

கடையநல்லூரில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தென்காசி காசநோய் மையத்தின் துணை இயக்குனர் டாக்டர் சுகுமாரன் ஆலோசனையின் பேரில் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு காசநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் பத்மநாதன் தலைமை வகித்தார். மாவட்ட காசநோய் மைய சுகாதார நல கல்வியாளர் திருமலைவேலு காசநோய் விழிப்புணர்வு மற்றும் காசநோய் ஏற்படும் விதம், பரவும் விதம், தடுப்பு முறை, காசநோய் தொடர்பான சிகிச்சை முறைகள் குறித்து பேசினார்.முகாமில் மாவட்ட காசநோய் மைய முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சந்திரசேகர், முதுநிலை ஆய்வகநுட்பனர் முத்துமீராஷா, அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை மேற்பார்வையாளர் மாரியப்பன் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

தென்னக ரயில்வேயில் வேலைவாய்ப்பு : கல்வித்தகுதி 10ம் வகுப்பு முதல்

தென்னக ரயில்வேயில் பணிகாலிடங்கள் 
மேலும் விவரங்களுக்கு www.rrcchennai.org.in என்ற இணைய தள முகவரியில் பார்க்கவும்