கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை அரசு நிலைநாட்ஹடக் கோரியும், கேரள அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாரக் குழு உறுப்பினர் துரை தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் சுப்பையா, நகரச் செயலர் அயுப்கான், ஏஐடியுசி மாவட்டச் பொதுச் செயலர் காசிவிசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நல்லூர் மக்களுக்காக தற்பொழுது kdnl.net - என்ற இணையதளம் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது எங்களுடைய சேவையை அவர்களுடன் இணைத்துக்கொண்டோம். இனி நீங்களும் kdnl.net-டுடன் இணைந்து கொள்ளுங்கள்
கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள
வியாழன், 22 டிசம்பர், 2011
முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக செங்கோட்டையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1357 பேர் கைது
முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக செங்கோட்டையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1357 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கோட்டையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை வலியுறுத்தியும், தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் முல்லை பெரியாறு உரிமை போர் மற்றும் சாலை முற்றுகை போர் நேற்று செங்கோட்டை வனச்சரகர் டோல்கேட் அருகே நடந்தது. மதிமுக கொள்ளை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமை வகித்தார். திருநெல்வேலி புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் பெருமாள், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்றுகை போராட்டத்தை வலியுறுத்தி முன்னாள் எம்.பி. சிப்பிபாறை ரவிசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் டாக்டர்.சதன்திருமலைக்குமார், குட்டி (எ) சண்முகசிதம்பரம் மற்றும் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
சாலை மறியல் போராட்டத்தை அடுத்து செங்கோட்டை-கொல்லம், செங்கோட்டை-திருமலைக்கோவில், செங்கோட்டை-கடையநல்லூர் உள்ளிட்ட வழிதடங்களின் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. சாலை மறியல் போராட்டத்தை வலியுறுத்தி பகுதி பகுதியாக சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 1357 கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சாலைமறியல் போராட்டத்தை அடுத்து நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜூ, மாவட்ட எஸ்.பி. விஜேயேந்திர பிதரி உத்தரவின்படி டி.எஸ்.பி.,கள் பாண்டியராஜன், ஜமீம் மற்றும் 10க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் நீரோடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடையநல்லூர் கருப்பாநதி அணையின் கீழுள்ள பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய், பெருங்கால்வாய் உள்ளிட்ட ஓடைகளின் மூலம் 72-க்கும் மேற்பட்ட குளங்கள் நீர்வசதி பெறுகின்றன.
இந்த அணை மூலம் சுமார் 9,515 ஏக்கர் நிலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. அணைக்கட்டின் கீழ் 7 சிறிய அணைக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு அவை மூலம் குளங்களுக்கு தண்ணீர் திருப்பிவிடப்படுகிறது.
விவசாய நிலங்களுக்கு கருப்பாநதி அணையிலிருந்து நீரை எடுத்துச் செல்லும் பாப்பான் கால்வாய் ஓடை மூலம் சுமார் 34 குளங்களிலுள்ள சுமார் 4,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
சுமார் 16 கிமீ தொலைவுக்கு நீரைச் சுமந்து செல்லும் பாப்பான் கால்வாயில், 4 கிமீ தொலைவு கடையநல்லூர் நகருக்குள் செல்கிறது. இப் பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் கால்வாய் குறுகிவிட்டது. இதனால், அணையிலிருந்து திறக்கப்படும் நீர் குளங்களுக்குச் செல்லாமல் ஊருக்குள் புகுந்து வீணாகிறது என இப் பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
நீரை வெளியேற்றினால் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அது தொடர்ந்து தவிர்க்கப்படுகிறது. இதனால் போதிய நீர்வரத்து இருந்தாலும் அணையிலிருந்து சிறிதுசிறிதாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் கடைமடைப் பகுதியிலுள்ள பல குளங்களுக்குத் தண்ணீர் செல்வதில்லை என்கிறார் கருப்பாநதி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ரத்தினவேல்பாண்டியன்.
கடந்த ஆண்டு பாப்பான் கால்வாய் ஓடையில் இருந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்ட நிலையில், இன்னமும் ஆக்கிரமிப்புகள் தொடருவதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கிடையே, கடையநல்லூர் ஜெகவீரராமபேரி குளத்தின் மறுகால் செல்லும் ஓடையிலும் கட்டட ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், அந்த ஓடை மிகவும் குறுகிவிட்டது. ஓடை வழியாக வீட்டின் கழிவுகளும் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் செல்ல இயலாதவாறு கட்டடங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் நகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையநல்லூர் டிரைவர்கள் வேலை நிறுத்தம் & உண்ணவிரதம் அறிவிப்பு
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவி: அதிமுக சார்பில் 9 பேர் விருப்ப மனு
கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு, போட்டியிட அதிமுகவினர் 9 பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான விருப்பமனு தாக்கல், அமைச்சர் செந்தூர்பாண்டியன் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.விருப்பமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் அதிமுக சார்பில் 9 பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதன் விவரம்:
மருத்துவர் சஞ்சீவி (மாவட்ட மருத்துவரணித் தலைவர்),கிட்டுராஜா (நகரச் செயலர்), முகமது மைதீன் (ஜெ.பேரவைச் செயலர்), முகையதீன்பிச்சை (ஜெ.பேரவை துணைத் தலைவர்),அமானுல்லா (வார்டு பிரதிநிதி),சுப்பிரமணியன் (முன்னாள் வார்டு செயலர்),பரக்கத் நிஷா (இளம்பெண்கள் பாசறை), கமாலுதீன் (ஜெ.பேரவைத் தகவல் தொடர்பாளர்), முத்துலட்சுமி (அதிமுக உறுப்பினர்).
கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு: இதற்கிடையே கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதன் காரணமாக விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ள பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடையநல்லூர் தொகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்
கடையநல்லூர் தொகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப், பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை அமைச்சர் செந்தூர்பாண்டியன் இன்று (16ம் தேதி) வழங்குகிறார். தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி போன்றவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட இந்த திட்டத்தினை தொடர்ந்து கடையநல்லூர் தொகுதியில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்குகிறார். இன்று (16ம் தேதி) காலை 10 மணிக்கு கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி இ.மசூதுராவுத்தர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்குகிறார். மாவட்ட கலெக்டர் செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார். கல்வித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து கடையநல்லூர் யூனியன் கம்பேரி பஞ்.,சிற்குட்பட்ட கனகசபாபதிபேரி கிராமத்தில் 168 பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி திட்டத்தினை துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அதிமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)