கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

அனைவருக்கும் இனிய தியாகத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
இறையருள் இன்று போல் என்றும்
நிறையட்டும்.
சகோதரத்துவம் உலகெங்கும் பரவட்டும்.



செவ்வாய், 22 ஜனவரி, 2013

கடையநல்லூரில் ஜமாஅதுல் உலமா சார்பாக மீலாது தொடர் சொற்பொழிவு

கடையநல்லூரில் ஜமாஅதுல் உலமா சார்பாக மீலாது தொடர் சொற்பொழிவு


கடையநல்லூரில் நாளை (23ம் தேதி) பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

கடையநல்லூரில் நாளை (23ம் தேதி) பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து தென்காசி தாசில்தார் தேவபிரான் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கடையநல்லூரில் நாளை (23ம் தேதி) பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடக்கிறது. கடையநல்லூர் நகராட்சி கூட்ட அரங்கில் நடக்கும் முகாமில் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, கம்பனேரி பகுதி1,2, போகநல்லூர், காசிதர்மம், வைரவன்குளம், கனகசபாபதிபேரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பட்டா மாறுதல் வழங்கப்படுகிறது. தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன் தலைமையில் நடைபெறும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடக்கிறது.

பட்டா மாறுதல் பெற விரும்புவோர் வில்லங்க சான்று, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு 29 ம் தேதி நேர்முகத் தேர்வு துவக்கம்

சவூதி அரேபிய சுகாதார துறை அமைச்சகத்தின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிய விரும்பும் டாக்டர்கள், சிறப்பு டாக்டர்களுக்கான நேர்முகத் தேர்வு டில்லி, பெங்களூரு மற்றும் கொச்சியில் 29ம் தேதி முதல் பிப். 8 ம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து பன்னாட்டு வேலைவாய்ப்பு கழக நிர்வாக இயக்குநர் பிரகாஷ் கூறியதாவது; சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற 2 ஆண்டு பணி அனுபவம் மற்றும் அனைத்து துறைகளிலும் 55 வயதிற்குட்பட்ட கன்சல்டண்ட்கள், சிறப்பு டாக்டர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். மேலும் மயக்க மருத்துவப் பிரிவின் தீவிர கண்காணிப்பு பிரிவில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்ற 45 வயதிற்குட்பட்ட ரெசிடெண்ட் டாக்டர்கள் தேவைப்படுகின்றனர்.
மேற்கண்ட பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு சவூதி அரேபிய தேர்வுக் குழுவினரால் டில்லி, பெங்களூரு, கொச்சின் போன்ற இடங்களில் 29ம் தேதி முதல் பிப்.8 ம் தேதி வரை நடக்கிறது.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணி அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கட், இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.
எனவே விருப்பமுள்ள டாக்டர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை வலயசமறலை ருஆ கலரடந.யவல என்ற இ.மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்கள் அறிய 24464267, 24464268 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு நிர்வாக இயக்குநர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும், மின்சார தட்டுப்பாட்டுக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க. கட்சிகள்தான் காரணம் சீமான் பேச்சு



சங்கரன்கோவிலில் மொழிஞாயிறு தேவநேய பாவாணர் நினைவை போற்றி தமிழர் எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது. தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
தமிழர்கள் அனைவரும் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும். ஆனால் மற்ற பண்டிகைகளைத்தான் நாம் மும்முரமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுகிறது. எனவே வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும்.
தமிழ் ஈழப் பிரச்சினையில் தி.மு.க. தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது. பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமை மூட வேண்டும் என்று பலமுறை கோரியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் மதுக்கடைகள்தான். எனவே குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாட்டுக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க. கட்சிகள்தான் காரணம்.
இவ்வாறு சீமான் பேசினார்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்

கடையநல்லூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் நகர்மன்ற தலைவர் திருமதி சைபுன்னிஸா அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.


வெள்ளி, 11 ஜனவரி, 2013

கடையநல்லூர் காயிதே மில்லத் திடல் அருகே தீ விபத்து

கடையநல்லூர் காயிதே மில்லத் திடல் வளாகத்தில் வசிப்பவர் ஹாஜா மைதீன் இவர் யானை கூண்டு அருகே  கடந்த சில வருடங்களாக பெட்டி கடை நடத்தி வருகிறார் .நேற்று கடையை அடைத்து விட்டு இவர் வெளியூர் சென்றுள்ளார் . இந்நிலையில்  நேற்று இரவு கடையில் திடிரென தீப்பிடித்துள்ளது . பிரிட்ஜ் ,   டி.வி ,   ஃ பேன் போன்றவை  தீயில் கருகியுள்ளன. இதன் மதிப்பு பல ஆயிரங்கள் இருக்கும் என கூறப்படுகிறது .இத்தீ விபத்திற்கு மின்சார  கசிவு  காரணமா என்று விசாரணை நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.