கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 22 ஜனவரி, 2013

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும், மின்சார தட்டுப்பாட்டுக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க. கட்சிகள்தான் காரணம் சீமான் பேச்சு



சங்கரன்கோவிலில் மொழிஞாயிறு தேவநேய பாவாணர் நினைவை போற்றி தமிழர் எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது. தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
தமிழர்கள் அனைவரும் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும். ஆனால் மற்ற பண்டிகைகளைத்தான் நாம் மும்முரமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுகிறது. எனவே வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும்.
தமிழ் ஈழப் பிரச்சினையில் தி.மு.க. தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது. பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமை மூட வேண்டும் என்று பலமுறை கோரியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் மதுக்கடைகள்தான். எனவே குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாட்டுக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க. கட்சிகள்தான் காரணம்.
இவ்வாறு சீமான் பேசினார்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்

கடையநல்லூரில் போலியோ சொட்டு மருந்து முகாம் நகர்மன்ற தலைவர் திருமதி சைபுன்னிஸா அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.


வெள்ளி, 11 ஜனவரி, 2013

கடையநல்லூர் காயிதே மில்லத் திடல் அருகே தீ விபத்து

கடையநல்லூர் காயிதே மில்லத் திடல் வளாகத்தில் வசிப்பவர் ஹாஜா மைதீன் இவர் யானை கூண்டு அருகே  கடந்த சில வருடங்களாக பெட்டி கடை நடத்தி வருகிறார் .நேற்று கடையை அடைத்து விட்டு இவர் வெளியூர் சென்றுள்ளார் . இந்நிலையில்  நேற்று இரவு கடையில் திடிரென தீப்பிடித்துள்ளது . பிரிட்ஜ் ,   டி.வி ,   ஃ பேன் போன்றவை  தீயில் கருகியுள்ளன. இதன் மதிப்பு பல ஆயிரங்கள் இருக்கும் என கூறப்படுகிறது .இத்தீ விபத்திற்கு மின்சார  கசிவு  காரணமா என்று விசாரணை நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.



வியாழன், 10 ஜனவரி, 2013

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் பெண்கடத்தல்: ஒருவர் கைது


கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் பெண்ணை கடத்தியது தொடர்பாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணாபுரம்,கோழிக்குஞ்சு வலசைத் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி. இவரது மகள் லிங்கம்மாள் (17). இவர், சங்கரன்கோவிலிலுள்ள தனியார் தொழில்சாலையில் வேலை செய்து வருகிறார். இம்மாதம் 6-ம் தேதி வேலைக்குச் சென்ற லிங்கம்மாள் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து கடையநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து லிங்கம்மாளை கடத்திச் சென்றதாக கிருஷ்ணாபுரம், ராமரை (29) கைது செய்தனர்.

சவூதியில் இலங்கைப் பெண்ணின் 'தலை துண்டி' மரண தண்டனை

சவூதி அரேபியாவில் 4 மாத குழந்தையின் மரணத்துக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்ற பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஸானா சவூதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் மீது 2005-ம் ஆண்டு 4 மாத குழந்தையின் மரணத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் இலங்கை அரசு சார்பில் ரிஸானாவின் வயது 17தான் என்பதால் கருணை காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. சவூதி அரசர் அப்துல்லாவுக்கும் ரிஸானாவின் பெற்றோர் கருணைமனு அனுப்பியிருந்தனர். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ரிஸானாவுக்கு கருணை காட்ட வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று ரிஸானாவின் தலையை துண்டித்து சவூதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. 

வெள்ளி, 4 ஜனவரி, 2013

கடையநல்லூர் வருவாய் பிர்காவில் 66 ஆயிரம் இலவச வேட்டி சேலைகள் வினியோகம்

கடையநல்லூர் வருவாய் பிர்காவில் 66 ஆயிரம் இலவச வேட்டி சேலைகள் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தென்காசி கோட்டத்தில் இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் கடையநல்லூர் பிர்காவிலும் இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், காசிதர்மம், சொக்கம்பட்டி, கம்பனேரி புதுக்குடி பகுதி-1, பகுதி-2, போகநல்லூர் ஆகிய கிராம வருவாய் பகுதிகளில் அமைந்துள்ள பயனாளிகளுக்கு இலவச வேட்டி ,சேலைகள் வழங்கப்படுகிறது.
கடையநல்லூர் வருவாய் பிர்காவில் தலா 33 ஆயிரம் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை தென்காசி ஆர்டிஓ., ராஜகிருபாகரன், தாசில்தார் தேவபிரான் ஆலோசனையின்படி வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் விஏஓ.,க்கள்,கிராம உதவியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 3 ஜனவரி, 2013