கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 21 மே, 2012

ஜூன் மாதம் கோச்சடையான் இசை வெளியீடு


இந்த ஆண்டில் மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் இசை ஆல்பங்களுள் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோச்சடையான்தான்.



இந்தப் படத்துக்காக ஏ ஆர் ரஹ்மான் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் தந்துள்ளார். 

படத்தின் இசை வெளியீடு குறித்து தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. வரும் ஜூன் மாதம் கோச்சடையான் இசையை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

படமே செப்டம்பரில் வெளியாகிவிடும் என தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் கூறியுள்ள நிலையில், ஜூன் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் கோச்சடையான் இசை வெளியாகவிருக்கிறது.

சோனி நிறுவனம் கோச்சடையான் இசையை வெளியிடுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழில் 3 டி தொழில் நுட்பத்தில் வெளியாகும் கோச்சடையான் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.

சனி, 19 மே, 2012

கடையநல்லூரில் மே 19 இன்று சாலை மறியல் படங்களுடன்


கடையநல்லூரில் மே 19 இன்று சாலை மறியல் படங்களுடன்

கடையநல்லூரில் பொதுப்பணித்துறை/நீர்வள ஆதார அமைப்பு போஸ்டரால் பரபரப்பு 
பாப்பன்கால்வாய் அக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க முயன்றதால் பொது மக்கள் சாலை மரியல் நடத்தி இடிக்க விடாமல் போராட்டம் நடத்தினர்


மறியல் நடந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://www.youtube.com/watch?v=zddhCblYED0&feature=youtu.be





கடையநல்லூரில் மே 19 இன்று சாலை மறியல் படங்களுடன்

கடையநல்லூரில் மே 19 இன்று சாலை மறியல் படங்களுடன்

கடையநல்லூரில் பொதுப்பணித்துறை/நீர்வள ஆதார அமைப்பு போஸ்டரால் பரபரப்பு 
பாப்பன்கால்வாய் அக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க முயன்றதால் பொது மக்கள் சாலை மரியல் நடத்தி இடிக்க விடாமல் போராட்டம் நடத்தினர்


மறியல் நடந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://www.youtube.com/watch?v=zddhCblYED0&feature=youtu.be





நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 411 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 411 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக காலி இடங்களின் விவரம் வருமாறு:
அமைப்பாளர்கள் பணியிடம்: ஆலங்குளம், தென்காசி - தலா 6, அம்பை, கடையநல்லூர்  - தலா 7, சேரன்மகாதேவி, களக்காடு, குருவிகுளம் - தலா 12, கடையம், பாப்பாக்குடி - தலா 5, கீழப்பாவூர், சங்கரன்கோவில் - தலா 9,  மானூர், மேலநீலிதநல்லூர் - தலா 11, நாங்குநேரி - 16, பாளையங்கோட்டை - 10, ராதாபுரம் - 14, செங்கோட்டை - 4, வள்ளியூர் - 18, வாசுதேவநல்லூர் - 19, நெல்லை மாநகராட்சி - 3. சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி நகராட்சிகளில் காலியிடம் இல்லை. மொத்தம் - 196 காலியிடங்கள்.
சமையல் உதவியாளர் பணியிடம்: ஆலங்குளம், வாசுதேவநல்லூர் - தலா 8, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில் - தலா 14, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி - தலா 10, கடையம், குருவிகுளம் - தலா 13, களக்காடு, செங்கோட்டை, நெல்லை மாநகராட்சி - தலா 4, கடையநல்லூர் - 7, கீழப்பாவூர் - 15, மானூர் - 9, மேலநீலிதநல்லூர், ராதாபுரம், தென்காசி - தலா 12, நாங்குநேரி - 27, பாப்பாக்குடி - 6, வள்ளியூர் - 11, கடையநல்லூர், புளியங்குடி நகராட்சிகள் - தலா 1, சங்கரன்கோவில், தென¢காசி நகராட்சிகளில் காலியிடம் இல்லை. மொத்தம் - 215 காலியிடங்கள்.
அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அமைப்பாளர் பணிக்கு 21.5.20012 அன்று பொது மற்றும் எஸ்சி பிரிவினர் 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண¢டும். எஸ்டி வகுப்பினர் 8வது வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருக்கலாம். அனுமதிக்கப்படும் பணியிடங்களில் 25 சதவீதம் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களை கொண்டு நிரப்பப்படும். 
சமையல் உதவியாளர் பணிக்கு பொது மற்றும் எஸ்சி பிரிவினர் 5ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்கலாம். பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. அமைப்பாளர், சமையல் உதவியாளர் இரு பணியிடங்களுக்கும் பொது மற்றும் எஸ்சி பிரிவினர் 21 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். எஸ்டி வகுப்பினர் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
நியமன இடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே தூரம் 3 கி.மீ., சுற்றளவிற்குள் இருக்க வேண்டும்.  இந்த பணியிடங்களுக்கு வருகிற 21ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி ஆணையர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கல்வித் தகுதி சான்று, வயது சான்று, சாதி சான்று, குடும்ப அட்டை மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றின் அத்தாட்சி நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர், உடல் ஊனமுற்றோர் அதற்கான சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும். நேர்முகத்தேர்வின் போது அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலக சத்துணவு பிரிவு, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி ஆணையாளர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 503 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல்

தமிழகம் முழுவதும் வட்டார வள மையங்களில் பணியாற்றி வரும் 503 ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து பள்ளிக் கல்வி இணை இயக்ககம் (பணியாளர் தொகுதி) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், வட்டார வள மையங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரை, பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து கல்வித் துறை ஆண்டுதோறும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டிலும் (2012-13) 503 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வருமாறு: தமிழ்- 4, ஆங்கிலம் - 65, வரலாறு - 4, தாவரவியல் - 30, விலங்கியல் - 30, வேதியியல் -85, இயற்பியல் - 85, கணிதம் - 200 பேர்.
 இவர்களின் பெயர்ப் பட்டியல் அனைத்து வட்டார வள மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 15 மே, 2012

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 17

நெல்லையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் காய்ச்சல் அறிகுறியுடன் சேர்க்கப்பட்டனர். கடந்த 4ம்தேதி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த புது அப்பனேரி மேலத்தெருவை சேர்ந்த குட்டி மகள் அஸ்வேதா(11) பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். நேற்று அவள் இறந்தாள்.
ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, ""அஸ்வேதாவிற்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் பரிசோதனை அறிக்கை விரைவில் வரவுள்ளது'' என்றார். நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது நெல்லை மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி தேர்வு முடிவுகள்


மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி

6ம் வகுப்பு : 6101-6108, 6201-6233, 6301-6332.
7ம் வகுப்பு : 7101-7148.
8ம் வகுப்பு : 8101-8136.
9ம் வகுப்பு : 9101, 9103, 9105, 9107-9115, 9117-9120, 9122, 9124-9132, 9134-9140, 9201, 9203-9209, 9211-9215, 9218, 9221-9231, 9233-9237.

மேலசெங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி

6ம் வகுப்பு :
>அ : 6101-6131.
ஆ : 6201-6232.
இ : 6301-6331.

7ம் வகுப்பு :
>அ : 7101-7160.
ஆ : 7201-7259.

8ம் வகுப்பு :
>அ : 8101-8149.
ஆ : 8201-8249.

9ம் வகுப்பு :
>9001-9015, 9017-9036, 9038-9043, 9045-9062, 9064-9067, 9069-9070, 9072-9121.

சுப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி

6ம் வகுப்பு :
>அ : 1-19, 23-44.
ஆ : 2-25, 27-40, 42, 43.

7ம் வகுப்பு : 1-36, 38-79.
8ம் வகுப்பு : 1-34, 36-76.

9ம் வகுப்பு :
>அ : 2-8, 10-58.
ஆ : 1, 3-59.

திருமலையப்பபுரம் கைலாசம் நினைவு உயர்நிலைப்பள்ளி

6ம் வகுப்பு :
>அ : 6101-6135.
ஆ : 6201-6235.
இ : 6301-6335.
ஈ : 6401-6422.

7ம் வகுப்பு :
>அ : 7101-7138.
ஆ : 7201-7238.
இ : 7301-7336
ஈ : 7401-7439.

8ம் வகுப்பு :
>அ : 8101-8106, 8108-8113, 8115-8121, 8122-8144.
ஆ : 8201-8223, 8225-8245, 8247, 8249.
இ : 8301-8322, 8324, 8325, 8328-8349.

9ம் வகுப்பு :
>அ : 9101-9104, 9106-9115, 9117-9133, 9135-9170, 9172, 9173, 9175-9177.

ஆ : 9201, 9204-9208, 9210, 9212, 9213, 9216, 9217, 9219, 9221-9228, 9230-9238, 9240-9244, 9246, 9248, 9249, 9251, 9254, 9255, 9257-9264, 9266, 9268, 9269, 9271-9273.

சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி

6ம் வகுப்பு :
>அ : 6101-6174
ஆ : 6201-6275
இ : 6301-6377

7ம் வகுப்பு :
>அ : 7101-7173
ஆ : 7201-7272
இ : 7301-7372
ஈ : 7401-7471

8ம் வகுப்பு :
>அ : 8101-8187
ஆ : 8201-8288
இ : 8301-8388

9ம் வகுப்பு :
>அ : 9101-9112, 9114-9125, 9127, 9128, 9130-9135, 9137-9155.
ஆ : 9201-9254.
இ : 9301-9336, 9338-9353, 9355, 9356.
ஈ : 9401-9404, 9406-9411, 9414, 9416, 9417, 9419, 9422-9437, 9439-9443, 9445-9465, 9467, 9470, 9472-9479.

உ : 9501-9502, 9504, 9505, 9507, 9511, 9513, 9515, 9516, 9519, 9522, 9525-9530, 9532, 9534, 9535, 9538, 9541, 9545, 9546, 9548.

ஊர்மேலழகியான் அரசு மேல்நிலைப்பள்ளி

6ம் வகுப்பு : 601-621, 623-635, 637.
7ம் வகுப்பு : 701-737, 739-746
8ம் வகுப்பு : 801-832.
9ம் வகுப்பு : 901-925, 927, 929-933, 935.