கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 24 ஜூலை, 2011

ஏ ஆர் ரஹ்மானுக்காக காத்திருக்கும் ரஜினி

பொதுவாக இன்றைக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை வேண்டும் என்றால் படத்தை முடித்துவிட்டு பல மாதங்கள் வரை கூட காத்திருக்கும் நிலைதான் உள்ளது.

ராணா படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். இதுவரை நான்கு பாடல்களை தயார் செய்துவிட்டாராம் ரஹ்மான். ரஜினி வந்து வேலையை ஆரம்பித்துவிடுவார்.


"ரஜினி சாருடன் பணியாற்றுவது மிகவும் சந்தோஷமான அனுபவம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து அவர் என்னைப் பார்க்கிறார். பல சிக்கலான தருணங்களில் அவரது வார்த்தைகள் உந்துதலாக இருக்கின்றன. அவரிடம் நான் கற்றுக் கொண்டது நிறைய. அவர் திரும்ப பழைய உற்சாகத்துடன் வந்து பட வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அவருக்காக காத்திருக்கிறேன். ராணாவுக்கு நான்கு பாடல்கள் ரெடி. ரஜினி சார் கேட்டுவிட்டு திருத்தங்கள் சொல்ல வேண்டும். அவ்வளவுதான்," என்றார்.

பொதுவாக அதிகம் பேசாத ரஹ்மான் இந்த அளவு உணர்ச்சிவசப்பட்டு பேசுவது இதுவே முதல்முறை.

சமீபத்தில் கூட, லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஹ்மான், அங்கு ரஜினியின் ரோபோ பாடலை இசைத்தபோது, ரஜினியின் படம் அரங்கிலிருந்த பெரிய திரைகளில் ஒளிரச் செய்தார். ரஜினி படத்தை பார்த்ததும் அந்த அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி ரசித்தனராம். இதனை தனது தளத்தில் 'ரோபோ ரஜினி'க்கு கிடைத்த வரவேற்பு என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார் ரஹ்மான்.

வெளிநாடு வேண்டாம்


அஸ்ஸலாமு அலைக்கும்

கடையநல்லூர் வாசிகளே .

நமது ஊரில் ஏகப்பட்ட இயக்கங்கள் இருந்தாலும் படித்து முடித்து வரும் மாணவர்களே வெளிநாடு செல்ல வேண்டாம் என சொல்ல உள் நாட்டில் வேலை பாரு என சொல்ல விழிப்புணர்வு எற்படுத்த ஒரு இயக்கமும் இல்லை.அதனால் நாம் மீண்டும் மீண்டும் வெளிநாடு வருகிறோம்.முன்பு படிக்காமல் வந்தோம் சரி இப்பம் படித்து முடித்து ஊரில எவ்வளவு வேலை இருந்தும் வெளிநாடு வருவது முறையா?நமது ஊரை விட்டு வெளிய சென்றால் வேலைகள் அதிகம் உள்ளது உள் நாட்டிலே வேலை கிடைக்கும்.வெளி நாட்டில் உள்ள நாம் அவர்களுக்கு எடுத்து சொல்ல கடமை உள்ளது.ஊரில் இருக்கும் அவர்கள் எடுத்து சொல்ல மாட்டார்கள் ஏனெனில் நாம் இங்கு இருந்தால்தான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும்.நாங்கள் படிக்காமல் இங்கு வந்து விட்டு கஷ்டப் படுகிறோம்.நீங்களாவது குடும்பத்துடன் நாட்டில் இருங்கள்.ஒருசிலர் என்னதான் மனைவி மக்களுடன் இங்கு இருந்தாலும் வயதான பெற்றோர்களை குடும்பம் களை விட்டு இருக்கலாமா?
இங்கு இருக்கும் நண்பர்கள் முடிந்த வரை ஊரில் செட்டில் ஆக முயற்சி செய்யவும்.ஊரில் இருக்கும் இயக்கங்களோ சொல்ல மாட்டார்கள் நாம் ஊருக்கு போனால் அவர்களுக்கு எப்படி நன்கொடை கொடுப்பது?
ஊரில் நடக்கும் தவறுகளும் குறையும்.வரும்கால குழந்தைகளும் நல்ல படிப்பார்கள்.
ஊரில் இருக்கும் இயக்கங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் தெரு பிரசாரம் செய்யுங்கள் வெளிநாட்டு வாழ்க்கையை நாடகம் என போட்டு காட்டுங்கள்.வெளிநாடு வருவதே தவிருங்கள் அல்லாஹ் நம்மளை சொர்கவாசியாக ஆக்கு வனாக ஆமீன் ஆமீன் ஆமீன்

இப்படிக்கு
வெளிநாடு வேண்டாம் நலச் சங்கம்

கடையநல்லூர் தொகுதிக்கு இன்று அமைச்சர் செந்தூர்பாண்டியன் வருகை

தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செந்தூர்பாண்டியன் இன்று (22ம் தேதி) தொகுதிக்கு வருகை தருகிறார். சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுகவினர் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடையநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., செந்தூர்பாண்டியன் புறநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார். ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக செந்தூர்பாண்டியன் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வரும், கட்சியின் பொது செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக சென்னை சென்ற அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
கடந்த 3ம் தேதி தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்ட செந்தூர்பாண்டியன் 4ம் தேதி அதற்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் துறையின் பல்வேறு ஆய்வு பணிகள் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இலாகா தொடர்பான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். தொடர்ந்து கடையநல்லூர் தொகுதிக்கு முதன் முதலாக அமைச்சர் இன்று (22ம் தேதி) மாலை வருகை தருகிறார்.
காலையில் மதுரையில் நடைபெறும் கதர்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தொடர்ந்து திருச்செந்தூருக்கு சென்று சுவாமி வழிபாடு செய்கிறார். இதனை தொடர்ந்து மாலை கடையநல்லூர் தொகுதியில் அமைந்துள்ள அவரது சொந்த ஊரான செங்கோட்டைக்கு வருகை தருகிறார். பதவியேற்றபின் முதன் முதலாக தொகுதிக்கு வருகை தரும் செந்தூர்பாண்டியனுக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஏற்பாடுகளை தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், சாம்பவர் வடகரை டவுன் பஞ்., துணைத் தலைவர் மூர்த்தி, இலஞ்சி சண்முகசுந்தரம், தொகுதி இணை செயலாளர்கள் நடராஜன், எல்ஐசி முருகையா, ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டி, சங்கரபாண்டியன், செல்லப்பன், நகர செயலாளர்கள் கிட்டுராஜா, தங்கவேல், நெல்கட்டும்செவல் ராஜா, வக்கீல் அய்யப்பராஜா, குட்டியப்பா மற்றும் அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.