கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 31 மார்ச், 2012

கடையநல்லூர் துராப் சைபுல்லா ஹாஜா தர்ஹா கந்தூரி விழா

கடையநல்லூர் துராப் சைபுல்லா ஹாஜா தர்ஹா கந்தூரி விழா





பெரிய தெரு மேல வட்டாரம் ஹஜிமா இஸ்மாயில் மீராள் அவர்கள் வபாத்தாஹி விட்டார்கள்

பெரிய தெரு மேல வட்டாரம் மர்ஹூம் ஹாஜி மைனாட்டி செய்யது மசூது சாஹிபு அவர்களின் மனைவியும் மைனாட்டி மீராஷா அவர்களின் தாயாருமான ஹஜிமா இஸ்மாயில் மீராள் அவர்கள் வபாத்தாஹி விட்டார்கள் 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஷா இன்று இரவு 8.30 மணியளவில் பெரிய தெரு நெய்னா முஹம்மது பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம் 

வெள்ளி, 30 மார்ச், 2012

ஏப்.1 முதல் மின் கட்டண உயர்வு அமுல்


மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணணயத்திடம் முறையிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கு கட்டண உயர்வு எப்படி அமல்படுத்துவது குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை வெளியிட மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
 
இன்று அறிவிக்கப்படும் மின்கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து அமுலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கடையநல்லூர் லயன்ஸ் சங்கங்களின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

கடையநல்லூர் லயன்ஸ் சங்கங்களின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்கங்களுக்கு மாவட்ட லயன்ஸ் கவர்னர் வருகை நிகழ்ச்சி முத்துசாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் நடந்தது. குற்றாலம் விக்டரி சங்க தலைவர் ராஜூ தலைமை வகித்தார். 

செவ்வாய், 27 மார்ச், 2012

கடையநல்லூரில் மீண்டும் சாக்கடை கலந்த குடிநீர்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டத்தை அடுத்து மீண்டும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடரும் சாக்கடை குடிநீரினால் நாளுக்கு நாள் பொதுமக்களிடம் பீதி அதிகரித்து வருகிறது. 

நெல்லை மாவட்டத்திலேயே அதிக மக்கள் வசிக் கும் கடையநல்லூர் நகராட்சி முதல் நிலை நகராட்சியாகும். வருட வருமானம் 4 கோடி ஈட்டும் கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் அனுபவிக்கும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலை யில் கடையநல்லூர் பகுதி யில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் பொதுமக்கள் குடிநீருக்கு நீர்நிலைகளை தேடி அலைகின்றனர். 


அத்துடன் எப்போதாவது கிடைக்கும் குடிநீரிலும் சமீப காலமாக சாக்கடை கலந்து வருவதால் பொதுமக்கள் தொற்று நோய் பர வும் பீதியில் உள்ளனர். கடையநல்லூர் பகுதியில் காய்ச்சல், வாந்தி பேதி போன்ற நோய்களும் தலை தூக்கி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ள னர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரி நக ராட்சி அலுவலகம் முற்றுகையிடப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில் நேற்று 21, 22 மற்றும் 23ம் வார்டு பொதுமக்கள் தங் கள் பகுதிக்கு வினியோகிக்கப்பட்ட சாக்கடை கலந்த குடிநீருடன் நகராட்சி அலுவலகத்தை மீண்டும் முற்றுகையிட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் வந்தனர்


நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் அதிமுக வெற்றி பெற கடையநல்லூரில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. இதனால் மக்களை பழி வாங்கும விதமாக குடிநீர் திட்டத்தை விரைவுப்படுதுவதில் தமிழக அரசு மெத்தனத்தை கடைப்பிடிப்பதாக பொதுமக்களிடையே பரவலாக கருத்து நிலவுகிறது.

கடையநல்லூர் நகராட்சியை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம்

கடையநல்லூர் நகராட்சியை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம்














நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும்,பாதுகாப்பான,சீரான குடிநீர் விநியோகம் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 26.03.2012 அன்று மாலை 5 மணியளவில் கடையநல்லூர் நகராட்சி பூங்கா அருகில் வைத்து நடைபெற்றது.மாவட்ட செயலாளர் சகோ.செய்யது அலி அவர்கள் ஆர்பாட்டத்தை கோஷமிட்டு துவக்கி வைத்தார்.மாநில பேச்சாளர் சகோ.அப்துன் நாஸிர் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இறுதியில் கண்டன உரை நிகழ்த்திய மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.ஹாஜா நூஹ் அவர்கள் தனது உரையில் “கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டினால் ஏற்படுகின்ற அவலங்களை எடுத்துரைத்தார். இது போன்ற அவலங்கள் தொடர்ந்தால் மக்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு மாபெரும் முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார்.அல்லாஹ்வின் அருளால் ஆர்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

ஆர்பாட்டத்தின் இறுதியில் சகோ.ஹாஜா நூஹ் அவர்களின் தலைமையிலான குழுவினர் நகராட்சி மன்றத்திற்கு சென்று ஆர்பாட்ட கோரிக்கைகளை புகாராக ஆணையாளர் மற்றும் நகர்மன்ற தலைவர் ஆகியோர் இல்லாத காரணத்தால் நகராட்சி மேலாளரிடம் அளித்தனர்.