கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 29 நவம்பர், 2012

கடையநல்லூர் அருகே சாலை விபத்துக்கள்

கடையநல்லூரில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்கள்

இது சமிபத்தில் கிருஷ்ணாபுரம் அருகே நடந்த சாலை விபத்து படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


கடையநல்லூரில் ஆட்டோ கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்

கடையநல்லூர் பேட்டை ரைஸ்மில் தெருவை சேர்ந்த மாணவர்கள் அனுஷ் (16), மைதீன் (16), ரபீக் (16), செய்யது அகமது (16) இவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர். கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டிக்கு தினமும் மாலை டியூசனுக்கு சென்று வந்தனர்.

அதே போல் நேற்று மாலை பாவா (53) என்பவரின் ஆட்டோவில் டியூசனுக்கு சென்றனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பாவா சடன்பிரேக் போட்டார். இதனால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்து வந்த மாணவர்கள் 4 பேரும் காயம் அடைந்தனர்.

அவர்களில் மைதீன் பாளை அரசு ஆஸ்பத்திரியிலும், ரபீக், செய்யது அகமது ஆகிய இருவரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும், அனுஷ் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கடையநல்லூர் அருகே உள்ள அடவிநயினார் அணையில் ஒரே நாளில் 8 அடி உயர்வு

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள அடவிநயினார் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8அடி உயர்ந்துள்ளது.
 அடவிநயினார் அணையின் மொத்தக் கொள்ளளவு 132 அடி. இதில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 74 அடி அளவில் தண்ணீர் இருந்தது. செவ்வாய்க்கிழமை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புதன்கிழமை காலை நிலவரப்படி 8 அடி உயர்ந்து 82 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
 தற்போது விநாடிக்கு 170 கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாயத்துக்காக விநாடிக்கு 25 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


கடையநல்லூரில் வாடகை பைக்குகளால் விபத்து: எஸ்.பி.யிடம் மனு

கடையநல்லூர் பகுதிகளில் வாடகை பைக்குகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்குமாறு எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடையநல்லூர் வட்டார பழைய இரு சக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கத் தலைவர் சுலைமான், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனு:
 கடையநல்லூர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படும் தொழில் சில ஆண்டுகளாக நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள் வாகனங்களைப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து உள்ளது. இவர்கள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்
கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

புதன், 28 நவம்பர், 2012

நண்பர் கலீல் திருமண அழைப்பிதழ்

நண்பர் கலீல் திருமண அழைப்பிதழ்



நண்பர்  கலீலுர் ரஹ்மான் -னின்  திருமண நல்வாழ்விற்காக  இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறோம் .

மேலான அல்லாஹ் உங்கள் இருவரையும் இம்மையிலும், மறுமையிலும் ஒன்றினைப்பானாக!

பெருமானாரின் (ஸல்) நிறைவான சாந்தி நம் அனைவரின் மீதும் நிறைந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!

பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜம அ பைனகுமா Fபீஹைர்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

கடையநல்லூர் பகுதியில் அதிகரித்து வரும் சுகாதார சீர்கேடு

கடையநல்லூர் பகுதியில்  நகராட்சி நிர்வாகம் மூலம் குப்பைகள் ஆங்காங்கே குவிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது. 
கடையநல்லூர் நகராட்சி நெல்லை மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நிலை நகராட்சியாகும். இங்கு  குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் டெங்கு உள்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் கடந்த 3 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். தற்போதும் இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 
 கடையநல்லூர் நகராட்சியில் போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதாரம் கேள்விகுறியாகி வருகிறது. இதனி தவிர்க்க சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து உரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
இதற்காக கடையநல்லூர் நகராட்சி மூலம் போகநல்லூர் பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் உரக்கிடங்கு உருவாக்கப்பட்டது. 
ஆனால் தற்போது கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அள்ளி போகநல்லூர் கொண்டு செல்லாமல் ஊருக்குள் கொட்டி வைத்துள்ளனர். குப்பைகளுடன் இறைச்சி கழிவுகளும் ஆங்காங்கே கொட்டப்படுவதால் தூற்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வியாழன், 22 நவம்பர், 2012

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய இசை ஆல்பம்!


சைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விரைவில் புதிய இசை ஆல்பம் ஒன்றை ரிலீஸ் செய்யப்போகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். அவருடைய இசையில் வெளியாகும் படங்கள் என்றாலே அந்தப் படத்துக்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகி விடும்.
பெரும்பாலும் தமிழில் வெளியாகும் தனி ஆல்பம் ரசிகர்களிடையே பெரிய அளவில் எடுபடாமல் போய்விடும். ஆனால் 1997 - ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட 'வந்தேமாதரம்' என்ற தனி இசை ஆல்பம் இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக அந்த ஆல்பத்தில் இடம்பெற்ற 'வந்தேமாதரம்' என்ற பாடல் இந்திய நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வெற்றிபெறும் நேரங்களில் இந்தியா முழுக்க பரவலாக இசை ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்டு அந்த ஆல்பம் பெரிய அளவில் ஹிட்டானது.
அந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக ஒரு தனி இசை ஆல்பத்தை ரிலீஸ் செய்யப்போகிறாராம்.
'மா தூஜே சலாம்' (Maa tujhe salaam) என்ற பெயரில் வெளியாக இருக்கும் இந்த ஆல்பம் எனக்கு மிகவும் சவாலான ஆல்பமாகவும் அதே சமயம் ரசிகர்களை கவரும் ஆல்பமாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஹிந்தியில் வெளியாக இருக்கும் இந்த ஆல்பம் தமிழிலும் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.