கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 21 ஜூன், 2012

தனது காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி!

17 லட்ச ரூபாய் கையிலிருந்தால் என்ன செய்வீர்கள். ஒரு பிரிமியம் கார், டுகாட்டி பைக் அல்லது அருமையான சிங்கிள் பெட்ரூம் வீடு வாங்கிவிடலாம் அல்லவா. ஆனால், பஞ்சாபை சேர்ந்த விவசாயி கம் தொழிலதிபர் ஒருவர் புதிதாக வாங்கிய தனது காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கியுள்ளார்.பஞ்சாப் மாநிலம், மொகாலியை சேர்ந்தவர் ஜெகஜித் சிங் சகல்(40). இவருக்கு ஒன்றாம் எண் என்றால் மிகவும் ராசியாம். இதனால், இவரது வீட்டு நம்பர் முதல் மொபைல் நம்பர் வரை அனைத்தும் ஒன்றில் தான் முடியும். இதே வரிசையில், சமீபத்தில் 98 லட்ச ரூபாயில் வாங்கிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பரை வாங்கியுள்ளார்.
farmer splurges rs 17 lakh on car registration number

சண்டிகரில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் சிஎச்01 ஏஎன் 0001(CH 01 AN 0001) என்ற பேன்ஸி நம்பரை 17 லட்ச ரூபாயக்கு வாங்கியுள்ளார் ஜெகஜித். ஏலத்தில் இந்த பேன்ஸி நம்பருக்கு அடிப்படை விலையே ரூ.25,000ம் தான். ஆனால், ஏலத்தில் கடும் போட்டி இருந்தால் பெரும் தொகையை கொடுத்து இந்த எண்ணை ஜெகஜித் வாங்கியுள்ளார்.
பெரும் தொகை கொடுத்தது பற்றி தான் சிறிதும் கவலைப்படவில்லை என்று கூறியுள்ள ஜெகஜித் கடும் போட்டியிலும் ராசியான நம்பர் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சி தருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த பேன்ஸி நம்பருக்காக 20 லட்சம் வரை தருவதற்கு தயாராக இருந்ததாக தெரிவித்து மேலும் ஒரு ஷாக் கொடுத்தார் ஜெகஜித்.
ஜெகஜித் சிங் சகலிடம் மொத்தம் 8 கார்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் 0001 என்று முடியும் பதிவு எண்ணை அவர் வாங்கியுள்ளார். கடந்த 1992ம் ஆண்டு முதன்முறையாக வாங்கிய மாருதி 800 காருக்கு பிபி10 கே 0001 என்ற பதிவு எண்ணை பெற்றுள்ளார். ஆனால், அப்போது ஏல நடைமுறைகள் இல்லாததால் எளிதாக வாங்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
விவசாயமும், சண்டிகரில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையும் நடத்தி வரும் ஜெகஜித் சிங்கின் தந்தை டாக்டராக பணிபுரிந்து வருகிறார். ஜெகஜித் சிங் மட்டுமல்ல அவரது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கார்கள் மற்றும் பைக்குகளும் 1 என்ற பதிவு எண்ணை கொண்டுள்ளன.

ஞாயிறு, 17 ஜூன், 2012

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர்.ஜூன் 1ம் தேதி முதல் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த 5ம் தேதி கேரள வனப்பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்ததின் அடிப்படையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழத் துவங்கியது. இதனால் சீசன் துவங்கியதாக சுற்றுலா பயணிகளும் குற்றாலம் வரத் துவங்கினர். விவசாயிகளும், விவசாய பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வந்த வேளையில் கடந்த 10 நாட்களாக சாரல் மழை இன்றி காற்று மட்டுமே தீவிரமாக வீசி வந்தது. இதனால் குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கேரள வனப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மட்டுமின்றி செங்கோட்டை, குற்றாலம், தென்காசி போன்ற பகுதிகளில் சாரல்மழை பெய்து வந்ததின் அடிப்படையில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் பரவலாகவும் தண்ணீர் விழுந்தது.அருவிகளில் தண்ணீர் விழும் செய்தி கேட்டு சுற்றுவட்டார பகுதிவாழ் மக்களும், சுற்றுலா பயணிகளும் கூட்டம், கூட்டமாக வந்து குளித்து மகிழ்ந்தனர். இப்பகுதியில் மழைமேகம் சூழ்ந்து தட்பவெப்ப நிலை மாறி இருண்டு காணப்படுவதால் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 15 ஜூன், 2012

சவுதியில் இறந்த தென்காசி வாலிபரின் உடலை கொண்டுவர உதவிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயலுக்கு மனைவி நன்றி

சவுதியில் இறந்த தென்காசி பாலமார்த்தாண்டபுரம் டிரைவரின் உடல் ஆறு மாதங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி அருகே பாலமார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ் (48). டிரைவர். இவரது மனைவி ஐயம்மாள் (40). இவர்களுக்கு பிரபாகரன் (18) என்ற மகனும், விஜயசாந்தி (16) என்ற மகளும் உள்ளனர். அல்போன்ஸ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியாவிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் சொந்த ஊருக்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கி விட்டு பின் மீண்டும் சவுதி அரேபியாவிற்கு சென்றார்.

கடந்த 26.12.2011 அன்று அல்போன்ஸ் இறந்து விட்டார் என அவரது மனைவிக்கு போன் மூலம் செய்தி வந்துள்ளது. சிலர் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்றும், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளனர். அல்போன்ஸ் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் தனது மனைவியிடம் போனில் பேசும் போது, தன்னுடைய முதலாளி கொடுமை படுத்துவதாக கூறியுள்ளார்.

தனது கணவர் எதற்காக இறந்தார் என தெரியாத நிலையில் அவரது உடலை பாலமார்த்தாண்டபுரத்திற்கு கொண்டுவர ஐயம்மாள் கலெக்டர் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் எம்.பி., காதர்முகைதீன் மூலம் மத்திய அரசு மற்றும் சவுதி அரேபியா தூதரக அதிகாரிகளிடம் பேசி அல்போன்ஸ் உடலை பாலமார்த்தாண்டபுரத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து அல்போன்ஸ் உடல் சவுதி அரேபியாவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பாலமார்த்தாண்டபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அல்போன்ஸ் உடலை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட எம்.பி., காதர் முகைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷாவிற்கு ஐயம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.



கடையநல்லூர் அருகே உயர்தர ஹாலிடே சிட்டி

கடையநல்லூர் அருகே உயர்தர ஹாலிடே சிட்டி 

கடையநல்லூர் அருகே சுரண்டை ரோட்டில் சுமார் 780 க்கும் மேற்பட்ட பிளாட்டுகள் ஸ்மார்ட் குழுமத்தினால் போடப்பட்டு தற்போது 300 க்கும் மேற்பட்ட பிளாட்டுகள் விற்பனையாகியுள்ளது உங்களின் கனவு வீடு மனையை இப்போதே முன்பதிவு செய்து கொள்ளுங்கள் 

ஸ்மார்ட் ஹாலிடே சிட்டியின் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா 17.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை விழா நடைபெறுவதால் இந்நிகழ்ச்சியில் இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 

அன்புடன் 

A அப்துல் காதர் 
மேலும் தொடர்புக்கு : 9942409600

அழைப்பிதழ் 

தமிழ்நாடு டிப்ளமோ தேர்வு முடிவுகள் இந்த http://www.tndte.org.in/results.html இணைய தளத்தில் காணலாம்

தமிழகத்தில் தற்போதுள்ள டிப்லோமோ தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன 

தமிழ்நாடு டிப்ளமோ தேர்வு முடிவுகள் இந்த http://www.tndte.org.in/results.html இணைய தளத்தில் காணலாம் 

Tamilnadu Directorate of Technical Education (TNDTE) is going to announce the TamilNadu Polytechnic results 2012 on today(15-06-2012) 3pm.

திங்கள், 11 ஜூன், 2012

முக்கியமான தமிழ் இ புத்தகங்கள்

கணிதமேதை ராமானுஜம் 

http://depositfiles.com/files/og7kjb8oh 


Dr.அப்துல்கலாம் 

http://depositfiles.com/files/ksdepwobc 


அனுவிஞ்ஞானி ராஜா ரமணன்
http://depositfiles.com/files/unjos5ka3
கெப்ளர்
http://depositfiles.com/files/yneoq7zuv

காரல்மார்க்ஸ்

http://depositfiles.com/files/s1y4av9dp


விவேகானத்தர் அமேரிக்காவில் ஆற்றிய உரை

http://depositfiles.com/files/7fa1ukjd0


தமிழக வரலாறு

http://depositfiles.com/files/riljxlkzh


லெனின் வரலாறு 

http://www.ziddu.com/download/17622741/14Lenin-Marxia-varalaaru.pdf.html

வந்தார்கள் வென்றார்கள் - வரலாற்றுத் தொடர்

http://www.ziddu.com/download/17624024/25Mathan-VanthaargalVentaargal.pdf.html

தந்தை பெரியார்  வாழ்க்கை வரலாறு

http://www.ziddu.com/download/17622746/1An-Autobiography-of-Periyar.pdf.html


பெண்ணின் பெருமை-வைகோ 

http://www.ziddu.com/download/17622772/19Vaiko-Pennin-Perumai.pdf.html


வரலாறு சந்தித்த வழக்குகள்-வைகோ 

http://www.ziddu.com/download/17622814/20.VARALAARUSANTHTHTHAVALUKKUKAL-VAIKO.pdf.html

தந்தை பெரியார் பொன்மொழிகள்

http://www.ziddu.com/download/17623079/23periyar-thoughtstamil.pdf.html

மதர் தெரசா வாழ்க்கை வரலாறு

http://www.ziddu.com/download/17623239/15Mother-Tresa.pdf.html

விவேகானந்தர் விவேக கதைகள்

http://www.ziddu.com/download/17623389/22Vivekanandar_Stories.pdf.html


காந்தி தரிசனம்

http://www.ziddu.com/download/17623409/7Gandhi-Tharisanam.pdf.html

ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு

http://www.ziddu.com/download/17623414/9Hitler.pdf.html

 காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறும்...

http://www.ziddu.com/download/17623444/8ghandi-congress.pdf.html

கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

http://www.ziddu.com/download/17623465/11Kamarajar-Life.pdf.html


போர்கேஸ்

http://www.ziddu.com/download/17623477/5borges.pdf.html


 கல்பனா சால்வா

http://www.ziddu.com/download/17623498/10Kalpana-chawla.pdf.html

ஞாயிறு, 10 ஜூன், 2012

இஃபா விருதுகள்: சிறந்த இந்தி இசையமைப்பாளர் ரஹ்மான்


சிங்கப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.
சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடந்தது. இதில் இந்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டன. கமல் ஹாசனின் விஸ்வரூபம் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் இந்தி படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ராக்ஸ்டார் மற்றும் ஜிந்தகி நா மிலேகி தோ பாரா ஆகிய இந்தி படங்கள் விருதுகளை அள்ளின. சிறந்த நடிகருக்கான விருதை ராக்ஸ்டார் படத்துக்காக ரன்பீர் கபூரும், சிறந்த நடிகைக்கான விருதை தி டர்ட்டி பிக்சருக்காக வித்யா பாலனும் பெற்றனர்.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ராக்ஸ்டார் படத்திற்கு இசையமைத்ததற்காக இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கிடைத்தது. மேலும் இந்தி சிங்கம் படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான விருது பிரகாஷ் ராஜுக்கு கிடைத்தது.
பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ராவுக்கு 2 விருதுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.